மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!!

0
152
#image_title

மார்க்கெட் இழந்த நடிகருக்கு இவ்வளவு படங்களா? ஆச்சரியத்தில் கோலிவுட்!!

தன்னந்தனியாக நின்ற நடிகர் விமலுக்கு வரிசைக் கட்டி நிற்கும் படங்களால், கோலிவுட் வட்டாரம் திகைத்து போகியுள்ளது.

2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல்.

கில்லி, கிரீடம், குருவி, பந்தயம் போன்ற படங்களில் சிறு-சிறு வேடங்களில் நடித்து தலையைக் காட்டிய நடிகர் விமல், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இவர் நடித்த முதல் திரைப்படமான “பசங்க” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவுடன் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இவர் நடித்த படங்களான களவாணி, தூங்காநகரம், கலகலப்பு போன்ற படங்கள் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது, இவர் நடித்த வாகை சூடவா படம் தேசிய விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் நடிகர் விமலின் நிலை தலைகீழாக மாறியது.

புலிவால், காவல், ஜன்னல் ஓரம், மஞ்சப்பை, அஞ்சல என மாதத்திற்கு ஒரு படம் வெளியாகி கொண்டே இருந்த போதும், அவை ஏதும் வெற்றிப் படமாக அமையவில்லை.

2016ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் ஒரு சில படங்களாக சுருங்கி விட்டன. இறுதியாக களவாணி-2 படம் கைகொடுக்கும் என்று நம்பி இருந்த நடிகர் விமலுக்கு அப்படமும் கை கொடுக்கவில்லை.

பட வாய்ப்பு எதுவும் இல்லாத சூழ்நிலையில் அவருக்கு “விலங்கு” என்ற வெப் சீரியஸ் அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அந்த வெப் சீரியஸ் மூலம் மீண்டும் முன்னணி நடிகர்கள் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றார். தற்போது “விலங்கு-2” வெப் சீரியஸிலும் நடிகர் விமல் நடித்த வருகிறார். இதற்கிடையே பட வாய்ப்பு ஏதும் இல்லாமல் மார்க்கெட் இழந்த நடிகர் விமலுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது கூட வரிசை கட்டி அவருக்கு படங்கள் வெளிவர காத்துக் கொண்டு இருக்கின்றன.

வரும் 21 ஆம் தேதி குலசாமி மற்றும் தெய்வமச்சான் ஆகிய இரு படங்கள் வெளியாக உள்ளன.

இயக்குனர் சக்தி சரவணன் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் வசனத்தில் உருவாகியுள்ள குலசாமி படம் வணிக ரீதியாக வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தெய்வ மச்சான்.

இதனைத் தொடர்ந்து, லக்கி, துடிக்கும் கரங்கள், சண்டைக்காரி, எங்க பாட்டன் சொத்து ஆகிய படங்களும் வரிசையில் நிற்கின்றன

தற்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை நடிகர் விமல் சரியாக பயன்படுத்தி கொள்வார் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்