இன்று முதல் சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்!!

0
50
Special train ticket booking starts from today!! Important information released by Southern Railway!!
Special train ticket booking starts from today!! Important information released by Southern Railway!!

இன்று முதல் சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்!!

இந்தியா பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகிறனர்கள்.  மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது.

இவ்வாறு சாமானிய மக்கள் அதிக அளவில் ரயில் பயணம் செய்து வருகின்றனர். இதில் வழங்கப்படும் குறைவான விலை டிக்கேட்களால் கோடி கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இது ஏராளமான பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமாக அமைகின்றது.

பண்டிகை காலங்களில் தெற்கு ரயில்வே பொதுமக்களுக்கு வசத்திய இருக்க வெளி ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில் சேவையை இயக்கிவருகிறது. அதனை தொடர்ந்து  தீபவாளி , பொங்கல், ராம்ராஜன் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள், மாவட்டங்களின் முக்கிய பண்டிகை அன்று சிறப்பு ரயில் சேவை வசதியை பொதுமக்களுக்காக தமிழக அரசு ஏற்படுத்தி தருகிறது . அதனையடுத்து தற்போது தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த தகவளின் படி வேளாங்கண்ணி  புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 5 ஆம் தேதி  இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதனையடுத்து செப்டம்பர் 5  இரவு 10. 30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் என் 06031 மறுநாள் காலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் என்றும் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து மறுவழியாக ரயில் என் 06031 வேளாங்கண்ணியில் இருந்து செபடம்பர் 6 ஆமா தேதி காலை 8. 50 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சிறப்பு ரயில் கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் சிவசாசி, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.  இந்த சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
Jeevitha