உடனடியாக இதனை செய்யுங்கள்! அதிபருக்கு சபாநாயகர் வைத்த அதிரடி கோரிக்கை!

0
61

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும், எழுந்திருக்கிறது.

அங்கு நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் அரசியல்வாதிகள் மீது கடும் கோபத்திலிருந்து வருகிறார்கள். இதன் காரணமாக, எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளிட்டோரின் வீடுகள் சூறையாடப்படுகின்றன.

அவர்களுடைய கோபங்கள் எந்தளவிற்கு இருக்கிறது என்று சொன்னால் ஆளும்கட்சியோ , எதிர்க்கட்சியோ, எந்த அரசியல்வாதியும் தங்கள் பக்கம் வரவே கூடாது என்பதுதான் அவர்களுடைய எண்ணமாக இருந்து வருகிறது.

அதோடு பிரதமராக இருந்த ராஜபக்சே பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

ஆனால் அவர் திடீரென்று அந்த நாட்டிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அவருடைய இல்லம் தீ வைத்து எரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்த போராட்டம் மிகவும் தீவிரமடைந்திருக்கிறது எதிர்க்கட்சித் தலைவர் கூட பொது மக்களை சந்திப்பதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை.

இப்படியான ஒரு சூழ்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தனே நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றினார் என்று சொல்லப்படுகிறது.

அப்போது அவர், நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாகவும், வன்முறை கோரத்தாண்டவமாடியது தொடர்பாகவும், விவாதிப்பதற்காக நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

நாட்டில் தற்போது பிரதமரும், அரசும், இல்லாததால் ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட மே மாதம் 17ஆம் தேதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

இலங்கையில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே சந்தித்து பேசுவார் என்று அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டிய விஷயங்கள் தொடர்பாக கட்சித் தலைவர்களை சந்தித்து பேசவிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவித்திருக்கிறார்.