திமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறிய ஆற்காடு வீராசாமியால் பரபரப்பு! வெளியேறியதற்கான காரணம் இதுதான்

திமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறிய ஆற்காடு வீராசாமியால் பரபரப்பு! வெளியேறியதற்கான காரணம் இதுதான்

திமுக முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்ட முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி கூட்டத்திலிருந்து திடீரென எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்ச் மாதமே நடைபெற இருந்த திமுகவின் பொதுக்குழு கூட்டம் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் கடந்த 9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த பொதுக்குழு கூட்டத்தின் வாயிலாக, திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோருக்கு பதவிப்பிரமாணம் செய்யப்பட்டதுடன், பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டதாகவும் … Read more

காஞ்சிபுரம் அருகே கேக் சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!!

காஞ்சிபுரம் அருகே கேக் சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!!

காஞ்சிபுரம் அருகே பேக்கரியில் வாங்கின கேக்கை சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் உள்ள பிரவீன் என்ற தனியார் பேக்கரி உள்ளது. தாயார் அம்மன் குளம் பகுதியை சேர்ந்த சுரேந்திரன், விமல் ராஜ் ஆகியோர் தங்கள் குழந்தைகளுக்காக அந்த பேக்கரியில் கேக் வாங்கினர். இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு கேக்கை கொடுத்துள்ளனர். கேக்கை சாப்பிட்ட குழந்தைகள் மூவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து … Read more

நீட் தேர்வுக்கு எதிராக உங்கள் குரல் அழுத்தமாக ஓங்கி ஒலிக்கட்டும்:! மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ஹேஸ்டேக்!

நீட் தேர்வுக்கு எதிராக உங்கள் குரல் அழுத்தமாக ஓங்கி ஒலிக்கட்டும்:! மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ஹேஸ்டேக்!

நீட் தேர்வுக்கு எதிராக உங்கள் குரல் அழுத்தமாக ஓங்கி ஒலிக்கட்டும்:! மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ஹேஸ்டேக்! மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வாக நடத்தப்படும் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யக்கோரி பல அரசியல் தலைவர்களால்,கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனாலும் இந்த கோரிக்கையானது மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இது மட்டுமின்றி கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த ஜெஇஇ மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரியும்,பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இருந்தபோதிலும் உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கையையும் … Read more

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நேரம் அதிகரிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நேரம் அதிகரிப்பு!

சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவையில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் கடந்த 7ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. அந்த வகையில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இரவு … Read more

சீமானிடம் இருந்து அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகிகள்! கட்சி உடைகிறது?

சீமானிடம் இருந்து அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகிகள்! கட்சி உடைகிறது?

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அது ஒரு பேரின்பக் கனாக்காலம், அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் கட்சியில் இருந்து நான் வெளியேறுகிறேன்” என அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.   முன்னதாக, மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரமும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.   இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேராசிரியரான கல்யாண சுந்தரம் கூறியதாவது, “கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதாக … Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு:! தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பெற்றோர்கள் கவனத்திற்கு:! தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பெற்றோர்கள் கவனத்திற்கு:! தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து அரசுஉயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,பள்ளிகள் திறப்பு குறித்தும்,நீட் தேர்வு குறித்தும்,அரியர் ரத்து விவகாரம் குறித்தும் செய்தியாளர்களிடம் முதல்வர் பேசினார். பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் கூறியதாவது: மத்திய அரசு, செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து,ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான … Read more

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது? முழுவிபரம்!

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது? முழுவிபரம்!

அரியர் மாணவர்களே தேர்வு எழுத தயாராக இருங்கள்:! அரியர் தேர்வைப்பற்றி தமிழ்நாடு அரசு கூறியது?முழுவிபரம்! கொரோனா பொது முடக்கம் காரணமாக,பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் மற்றும் AICTE, மற்றும் UGC-யின் வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டு அல்லாது தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு,பல எதிர்ப்புகள் வந்த வண்ணமே இருந்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் மற்றும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் … Read more

தமிழகத்தில் புதிதாக 5584 பேருக்கு கொரோனா; 78 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் புதிதாக 5584 பேருக்கு கொரோனா; 78 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,584 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,80,524 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 78 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,090 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,516 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

Teachers Wanted – அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் நிரந்தர பணியிடங்கள் (அரசு விதிகளின் படி ஊதியம்)

Teachers Wanted - அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் நிரந்தர பணியிடங்கள் (அரசு விதிகளின் படி ஊதியம்)

Teachers Wanted – அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் நிரந்தர பணியிடங்கள் (அரசு விதிகளின் படி ஊதியம்) ஜே.ஜி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அன்னூர் அரசு நிதி உதவி பெரும் பள்ளிக்கு கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு பதிவுத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி : முதுகலைப் பட்டதாரி ஆசிரியை (கணிதம்) – M.sc., B.ed., (பெண்கள் மட்டும்) முதுகலைப் பட்டதாரி ஆசிரியை (பொருளியல்) – M.sc., B.ed., (பெண்கள் மட்டும்) முதுகலைப் பட்டதாரி ஆசிரியை … Read more

பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணால் வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் :?

பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணால் வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் :?

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணை நேரில் பார்க்க சென்ற போது நிர்வாணமாக்கப்பட்டு,அடித்துத் துரத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த வாலிபர் வினோத்குமார் வெட் டிசைனராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவருக்கு பேஸ்புக் மூலம் நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது .அந்த பெண் அவ்வப்போது ஆபாச படங்களை அனுப்பி வைக்குமாறு சபலத்தை தூண்டி விட்டுள்ளார் .இதனை அடுத்து சாபத்திற்கு ஆளான … Read more