நீட் தேர்வுக்கு எதிராக உங்கள் குரல் அழுத்தமாக ஓங்கி ஒலிக்கட்டும்:! மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ஹேஸ்டேக்!

0
76

நீட் தேர்வுக்கு எதிராக உங்கள் குரல் அழுத்தமாக ஓங்கி ஒலிக்கட்டும்:! மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ஹேஸ்டேக்!

மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வாக நடத்தப்படும் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யக்கோரி பல அரசியல் தலைவர்களால்,கோரிக்கை விடுக்கப்பட்டது.ஆனாலும் இந்த கோரிக்கையானது மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இது மட்டுமின்றி கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த ஜெஇஇ மற்றும் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரியும்,பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.
இருந்தபோதிலும் உச்சநீதிமன்றம் இந்த கோரிக்கையையும் ஏற்க மறுத்து,குறித்த தேதியில் தேர்வுகள் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புபடி,குறித்த தேதியில், ஜெஇஇ தேர்வுகள் நடைபெற்று வருகிறது. மேலும் வருகின்ற 13-ஆம் தேதி நீட்தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற இருக்கின்றது .

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த எலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். ஆனால் நீட் தேர்வு குறித்து அச்சத்தால்,விக்னேஷ் மன உளைச்சலுக்கு ஆளாகி அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் டாக்டர் எஸ். ராமதாஸ் அவர்கள்,தனது ட்விட்டர் பக்கத்தில்,ban நீட் தேர்வு என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.அவர் பதிவிட்டுள்ளதவாறு:

நாட்டோரே, நல்லோரே, நன்மக்களே…. நீட் தேர்வா, பிள்ளைகளை பலி வாங்கும் பலிபீடமா? வருங்கால செல்வங்கள் நீட் என்ற பெயரால் பலி கொடுக்கப்படுவதைத் தடுக்க உங்கள் குரல் அழுத்தமாக ஓங்கி ஒலிக்கட்டும் நீட் தேர்வுக்கு எதிராக!#BanNEET இன்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/drramadoss/status/1303710924289667073?s=19

author avatar
Pavithra