லிபியா நாட்டில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய டேனியல் புயல்!!! 150க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்!!!

0
37
#image_title

லிபியா நாட்டில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்திய டேனியல் புயல்!!! 150க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்!!!

லிபியா நாட்டில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கில் மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா நாடு அமைந்துள்ளது. ஏற்கனவே லிபியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகின்றது. இதன் காரணமாக லிபியா நாட்டின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். லிபியா நாட்டின் மேற்கு பகுதியை அரசு நிர்வகித்து வருகின்றது.

உள்நாட்டு போர் நடைபெற்று வரும் லிபியா நாட்டை தற்பொழுது டேனியல் புயல் தாக்கியுள்ளது. டேனியல் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நாடு முழுவதும் நீரில் முழ்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்கையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் லிபியா நாட்டில் வசிக்கும் மக்களால் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லிபியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டெர்னாவில் 2000க்கும் மேற்பட்டோர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்திருப்பார்கள் என்று அச்சம் எழுந்துள்ளது.

டேனியல் புயலுடன் சேர்த்து கனமழையும் பெய்ததால் லிபியா நாட்டில் உள்ள அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் தான் பலர் சிக்கி பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

டேனியல் புயல் காரணமாக லிபியா நாட்டின் கடற்கரை பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. லிபியா நாட்டில் பாய்தா, மார்ஜ், சூசா ஆகிய பகுதிகள் டேனியல் புயலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லிபியா நாட்டின் முக்கிய அணைகளில் இருந்து வெளியேறிய தண்ணீர் லிபியா நாட்டின் கிழக்குப் பகுதியை வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புயல் பாதிப்புகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.