மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!! அரசு கஜானாவை நிரப்ப விலையை உயர்த்தப்போகும் டாஸ்மாக் நிர்வாகம்!!

0
27
#image_title

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!! அரசு கஜானாவை நிரப்ப விலையை உயர்த்தப்போகும் டாஸ்மாக் நிர்வாகம்!!

தமிழகத்தில் மது பாட்டில்களின் விலை விரைவில் அதிகரிக்க போகிறது.அதன்படி பீர்,ஒயின் உள்ளிட்ட மது பாட்டில்களின் பிராண்டை பொறுத்து விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டு வருவாயாக சுமார் 44 ஆயிரம் கோடி கிடைத்து வருகிறது.மது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் அதிக வருவாய் கிடைக்கின்றது என்பதற்காக அரசு தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் இயக்கி வருகிறது.இந்த டாஸ்மாக்கால் குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் எத்தனையோ குடும்பங்கள் நாசமாகி வருகிறது.ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சொன்ன திமுக தான் தற்பொழுது மது கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.காரணம் அரசுக்கு அதிக வருவாயை ஈட்டி தருவதில் முதல் இடத்தில் இருப்பது இந்த டாஸ்மாக் தான்.
மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள்,பெண்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதை பற்றி கண்டு கொள்ளாமல் கஜானாவை நிரப்ப வேண்டும் என்பதற்காக தற்பொழுது மது பாட்டில்களின் விலையை உயர்த்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு இருக்கிறது.

அதன்படி 180 மில்லி குவாட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாய் மற்றும் 375 மில்லி ஆப் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட இருக்கிறது.அதேபோல் பீர் பாட்டில் விலை ரூ.10 அதிகரிக்க உள்ளது.பிராண்டுகளை பொறுத்து விலை உயர்த்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளதால் ரூ.10 முதல் ரூ.80 வரை மது பாட்டில்களின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.இதனால் மது விரும்பிகள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

மேலும் இந்த விலை ஏற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.1000 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.தமிழக பெண்களின் கோரிக்கை மற்றும் கஷ்டத்தை விட வருவாய் தான் திமுக அரசுக்கு முக்கியமாக இருக்கிறது என்பது இதில் இருந்தே தெரிய வருகிறது.மது விலக்கை படிப்படியாக அமல்படுத்த முடியவில்லை.ஆனால் அதன் விலையை உயர்த்த மட்டும் திமுக அரசால் முடிகிறதா? என்று தற்பொழுது நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.