சூர்யா சிவா ராஜினாமா.. அண்ணாமலையின் திடீர் மீட்டிங்! அதிமுக கொடுக்கும் அடுத்த நெருக்கடி!  

0
117
Surya Siva resigns.. Annamalai's surprise meeting! AIADMK's next crisis!
Surya Siva resigns.. Annamalai's surprise meeting! AIADMK's next crisis!

சூர்யா சிவா ராஜினாமா.. அண்ணாமலையின் திடீர் மீட்டிங்! அதிமுக கொடுக்கும் அடுத்த நெருக்கடி!

2024 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல கட்சிகளும் தற்போது இருந்தே அதற்கான பணிகளை செய்து வரும் நிலையில் பாஜக சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் இது குறித்து அனைத்து நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

பாஜக தலைவர் நட்டா மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வரப்போகும் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை சென்னைக்கு வந்ததை எடுத்து இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டமானது காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில் மாலை வரை நடக்கும் என்று கூறியுள்ளனர்.

குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு எந்தெந்த வகைகளில் ஆதரவு அளிக்க வேண்டும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேபோல முன்பே ஒரு பேட்டியில் அண்ணாமலை கூறியதாவது, அதிமுக உடனான கூட்டணி இருக்கும் என்பதற்காக அனைத்தையும் ஏற்க முடியாது என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் இருவேறு அணிகளாக பிரிந்து இருக்கும் நிலை பாஜகவிற்கு சற்று வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதால், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைய வேண்டும் என பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது பயனளிக்கவில்லை.

எனவே அதிமுக மேல் உண்டான அதிருப்தி காரணமாக தான் அண்ணாமலை அன்று அவ்வாறு கூறி இருந்தது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

இந்நிலையில் நடைபெறப்போகும் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெற வேண்டும் அதற்கான பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் கூற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.சூர்யா சிவா வெளியேறிய நிலையில் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஓர் புறம்  இருக்க அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் தனி தனியாக இருப்பது மற்றொரு புறம் அண்ணாமலைக்கு நெருக்கடியை கொடுக்கிறது.