மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

0
33

மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்…

 

பல நல்ல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

 

பிரபல இயக்குநர் சித்திக் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் 1986ம் ஆண்டு வெளியான ‘பாப்பன் ப்ரியப்பேட்ட பாப்பன’ என்ற திரைப்படத்தின் மூலம் கதையாசிரியாக அறிமுகமானார். முதல் திரைப்படமே பெரிய அளவில் ஹிட் கொடுக்க பின்னர் அடுத்தடுத்து சில திரைப்படங்களுக்கு கதையாசிரியராக பணிபுரிந்தார்.

 

அதன் பின்னர் இராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் சித்திக் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் இயக்குநர் சித்திக் இயக்கிய பிரெண்ட்ஸ் திரைப்படத்தை தமிழில் அவரே இயக்கி ரீமேக் செய்தார். தமிழில் வெளியான பிரெண்ட்ஸ் திரைப்படத்தில் நடிகர்கள் விஜய், சூரியா, ரமேஷ் கண்ணா ன, வடிவேலு, தேவையாணி ஆகியோரை வைத்து மிகச் சிறப்பாக அந்த படத்தை இயக்கியிருந்தார். அதிலும் நடிகர் வடிவேலு அவர்களை பிரெண்ட்ஸ் படத்தில் சிறப்பக பயன்படுத்தி காமெடி காட்சிகளை சிறப்பாக எடுத்திருந்தார். அதன் பின்னர் விஜயகாந்த் நடிப்பில் எங்கள் அண்ணா, பிரசன்னா நடிப்பில் சாது மிரண்டால், நடிகர் விஜய் நடிப்பில் காவலன் போன்ற.சில படங்களை இயக்கிய சித்திக் நடிகராகவும் சில படங்களில் நடித்திருப்பார். இயக்குநர் சித்திக் கடைசியாக நடிகர் மோகன்லால் நடிப்பில் 2020ம் ஆண்டு வெளியான ப்ரோ டேடி திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

 

இந்நிலையில் நிமோனியா மற்றும் கல்லீரல் தெற்றால் சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் சித்திக் அவர்களுக்கு நேற்று முன்தினம்(ஆகஸ்ட்7) திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

 

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இயக்குநர் சித்திக் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இயக்குநர் சித்திக் அவர்கள் நேற்று(ஆகஸ்ட்8) உயிரிழந்ததாக மருத்துவமனை.தகவல் வெளியிட்டது.

 

இயக்குநர் சித்திக் அவர்களிர் மறைவு மலையாள திரையுலகத்தை மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகத்தையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. மேலும் திரையுலகமும், இரசிகர்களும் இயக்குநர் சித்திக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.