சின்னத்திரை நடிகை சித்ராவின் கொலை வழக்கு ஹேம்நாத்திற்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த காவல்துறை!

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா அவர்களின் தற்கொலை தொடர்பாக அவருடைய கணவர் ஹேம்நாத் அவர்களுக்கு எதிராக நசரத்பேட்டை காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது. பிரபல சின்னத்திரை நடிகையும் நிகழ்ச்சி தொகுப்பாளரான சித்ரா சமீபத்தில் சென்னை நசரத்பேட்டை இருக்கின்ற ஒரு சொகுசு விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக ரசிகர்களிடையே பிரபலம் ஆனார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த … Read more

டோக்கன் களில் தலைவர்கள் படத்திற்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி!

பொங்கல் பரிசு தொகை கொடுக்கப்படும் டோக்கன்களில் தலைவர்களுடைய புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி எல்லா ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2500 தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சேலத்தில் ஆரம்பித்த முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் முதலமைச்சர் பரிசுத்தொகை அறிவித்ததற்கு எதிர்ப்பும், … Read more

உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! உறைந்து போன முதல்வர்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிகழ்வில் விதிமுறை மீறப்பட்ட வழக்கு சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர தமிழகம் முழுக்க சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு போடப்பட்டு இருக்கின்றது தொற்று குறைய தொடங்கியதை முன்னிட்டு மாதாமாதம் படிப்படியான தளர்வுகளை அறிவித்து வருகின்றது அரசு. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மேலே பொது இடங்களில் ஒன்று கூட கூடாது பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்ற விதிமுறை இருந்து … Read more

தமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

கொரோனா தொற்று நோய் பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கும், அதன்பின் சில தளர்வுகளும் தற்போதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவல் முழுமையாக குணமடையாதலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அக்டோபர் 1 தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்பது போன்ற பல தகவல்களும் வெளியானது. ஆனால் இன்றுவரை பள்ளிகள் வழக்கம் போல் … Read more

அரியர் தேர்ச்சி விவகாரம்! தமிழக அரசின் அரசாணை யுஜிசி விதிகளுக்கு புறம்பானது..! ஏஐசிடிஇ பதில்!

அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு (யுஜிசி) புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ), சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கலை அறிவியல் பொறியியல் எம்சிஏ படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். … Read more

விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி ஊர்வலம் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்?

நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலம் எடுத்துச் செல்லவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் பத்திரிக்கையாளர் அன்பழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதாக கூறியுள்ளதை சுட்டிக்காட்டி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். தடையை மீறி விநாயகர் சிலைகளை … Read more

அரசியலில் ரவுடிகள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்:! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கோரிக்கை!

சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதனை எதிர்த்து அவரது மனைவி ஜமுனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு இன்று விசாரித்து. அவர்கள் அரசியல் பின்புலத்துடன் ரவுடிகள் பலர் புதுச்சேரியில் உலா வருவதாக தெரிவித்தனர். மேலும் ரவுடிகள் அரசியலுக்குள் நுழைவதன் மூலம் குற்றவாளிகள், கொள்கைகளை உருவாக்குபவர்களாக மாறுவது நாட்டிற்கே துரதிருஷ்டவசமானது என நீதிபதிகள் … Read more

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்!

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்! சட்டவிரோதமாக பணி அமர்த்தப்பட்டுள்ள மாணவிகளை மீட்கும் பொருட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரபாகரன்,வேலுமணி இருவர் முன்னிலையில் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல பணத்திற்கு ஆசைப்பட்டு ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த கொரோனா காலத்தில் மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் E-PASS வழங்குவதற்கு … Read more

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசிற்கு சாட்டையடி கொடுத்த நீதிமன்றம்

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசிற்கு சாட்டையடி கொடுத்த நீதிமன்றம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகள் மூடியுள்ளதால் வழக்கமாக குடிக்கும் நபர்கள் பெரும்பாலும் அந்த குடிப்பழக்கத்திலிருந்து விடுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் … Read more

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு !

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பு! சென்னை அயனாவரத்தில் சேர்ந்த 11 வயது சிறுமியை லிப்ட் ஆப்பரேட்டர் உட்பட 17 பேர் தொடர்ந்து ஆறு மாத காலத்துக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   இதுதொடர்பான வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அந்த 17 பேர் மீதும் குண்டர் … Read more