தமிழக சட்டசபையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வானார்!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் இணைந்து அவருடைய அமைச்சரவை சகாக்கள் 34 பேர் பதவி ஏற்றுக் கொண்டார்கள். அதிமுக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றியடைந்து பலமான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறது. இந்நிலையில் அதிமுகவில் அடுத்தது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்த குழப்பத்திற்கு … Read more

காத்திருந்த பயணிகளை நெகிழவைத்த முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் வெகு நேரம் காத்திருந்த பயணிகள் குடிநீர் உணவு இல்லாமல் தவிப்பதை தெரிந்து கொண்டதும் பயணிகளை சமூக நல கூடத்திற்கு அழைத்துவரச் செய்து உணவு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக வெளியிடப்பட்டிருக்கின்ற அறிவிப்பில் நேற்றைய தினம் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பயணிகள் பயணம் செய்ய இயலாமல் நீண்ட நேரமாக காத்து இருந்து வருகிறார்கள் என்ற செய்தியை … Read more

கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்!

நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் இருக்கின்ற கல்லூரிகள் செயல்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக, மாணவர்கள் இணையதளம் மூலமாக கல்வியை கற்று வருகிறார்கள். அதே சமயத்தில் அவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது இவ்வாறான சூழ்நிலையில், செமஸ்டர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து உரையாடி இருக்கிறார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி அண்ணா பல்கலைக்கழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் … Read more

அமைச்சர்களுக்கு அதிர்ச்சி தந்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் நேற்று முதல் முறையாக அமைச்சரவை கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிவுற்றதும் அதிகாரிகள் வெளியே சென்ற பின்னர் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ரகசியமாக உரையாடியதாக தகவல் கிடைத்திருக்கிறது. அந்த உரையாடலின்போது அமைச்சர்களுக்கு பல அறிவுரைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எல்லாத்துறைகளிலும் நடைபெற்று வரும் பணிகள் நியமனங்கள், அமைச்சர்களின் உதவியாளர்கள் நியமனம் செய்வது கூட வெளிப்படையாக இருக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின். அதோடு பத்து … Read more

#BREAKING கொரோனா நிவாரண நிதி திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்தநிலையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அதன்படி கடந்த 7ஆம் தேதி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து அவருடைய அமைச்சரவை சார்ந்த 33 மந்திரிகளும் தங்களுடைய பதவியை ஏற்றுக் … Read more

முதல்வரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய மதுரை சிறுவன்!

கொரோனா தொற்றின் முதல் அலையின் பொழுது அமெரிக்கா எந்த அளவிற்கு பாதிப்படைந்தது தற்போது அதே நிலையில் இந்தியா இருந்து வருகிறது.இந்த நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கு முடியவில்லை என்று சொல்லப்படுகிறது இவ்வாறான சூழ்நிலையில், இந்தியாவின் தற்போதைய நிலையை பார்த்து உலக நாடுகள் அதீத கொடை உள்ளத்தோடு இந்தியாவிற்கு பலவகையிலும் உதவிகளை புரிந்து வருகிறார்கள். அதில் … Read more

கொரோனா தடுப்பு பணி! அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்த ஸ்டாலின்!

தற்போது நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் மிகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதோடு முன்கள பணியாளர்களும் சோர்வின்றி பணியாற்றி வருகிறார்கள்.இதற்கிடையில் இந்த தொற்றிற்கு முன்கள பணியாளர்களாக விளங்கிவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் பலியாகி வருவது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில் நோய் தடுப்பு பணிகளுக்காக 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமனம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தமிழ்நாட்டில் நோய் தொற்று … Read more

நற்செய்தி! இனி பெண்களோடு திருநங்கைகளும் இலவச பயணம் மேற்கொள்ளலாம்!

கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஐந்து வாக்குறுதிகளுக்கு கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார். அதில் ஒன்றுதான் மகளிருக்கான இலவச பேருந்து பயணம். அதன்படி இன்று முதல் தமிழகத்தில் அனைத்து நகர சாதாரண … Read more

வாக்குறுதியை காப்பாற்றாத முதல்வர்! கொந்தளிப்பில் மக்கள்!   

Chief who does not keep his promise! People in turmoil!

வாக்குறுதியை காப்பாற்றாத முதல்வர்! கொந்தளிப்பில் மக்கள்! சட்டப்பேரவை தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.தேர்தல் பற்றிய கருத்து கணிப்புகள் பிரச்சாராம் தொடங்கிய முதலே வந்த வண்ணமாகவே தான் இருந்தது.அந்த கருத்துகணிப்புகளில் திமுக தான் வெற்றியை பெறும் என பெரும்பாலோனர்  கூறியிருந்தனர்.இதனை அதிமுக முற்றிலும் எதிர்த்து வந்தது.அந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற்றது.கருத்துகணிப்புகளில் வெளிவந்ததை போலவே திமுக 159 தொகுதிகளில் முன்னிலை வகித்து வெற்றியடைந்தது.அதனையடுத்து அதிமுக தோல்வியை சந்தித்தது. திமுக பிரச்சாரம் செய்தபோது … Read more

உதயநிதி செய்த செயலால் விவாதத்திற்கு உள்ளான திமுக!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் திமுகவை சார்ந்தவர்களும் மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் அதோடு ஸ்டாலினின் குடும்பத்தினரும், திமுகவின் முக்கிய தலைவர்களும், பங்கேற்றார்கள். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்த சமயத்தில் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் அவருடைய ஒரே மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஆனந்த கண்ணீரில் இருந்தார்கள். … Read more