வாக்குறுதியை காப்பாற்றாத முதல்வர்! கொந்தளிப்பில் மக்கள்!   

0
75
Chief who does not keep his promise! People in turmoil!
Chief who does not keep his promise! People in turmoil!

வாக்குறுதியை காப்பாற்றாத முதல்வர்! கொந்தளிப்பில் மக்கள்!

சட்டப்பேரவை தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது.தேர்தல் பற்றிய கருத்து கணிப்புகள் பிரச்சாராம் தொடங்கிய முதலே வந்த வண்ணமாகவே தான் இருந்தது.அந்த கருத்துகணிப்புகளில் திமுக தான் வெற்றியை பெறும் என பெரும்பாலோனர்  கூறியிருந்தனர்.இதனை அதிமுக முற்றிலும் எதிர்த்து வந்தது.அந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற்றது.கருத்துகணிப்புகளில் வெளிவந்ததை போலவே திமுக 159 தொகுதிகளில் முன்னிலை வகித்து வெற்றியடைந்தது.அதனையடுத்து அதிமுக தோல்வியை சந்தித்தது.

திமுக பிரச்சாரம் செய்தபோது பல அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்தனர்.அவ்வாறு அறிவித்த அறிக்கைகளில் பதவியேற்றதும் முதலில் 5-திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.அதில் இரண்டு திட்டங்களுக்கு மக்கள் ஆரம்பத்திலேயே பல எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.பெண்கள் கட்டணம் இல்லாமல் பேருந்துகளில் செல்லலாம் எனக் கூறிவிட்டு,குறிப்பிட்ட பேருந்துகளுக்கு மட்டும் அந்த சலுகைகளை தந்துள்ளனர்.பால் விலை கொள்முதல் செய்யப்படும் விலையிலிருந்து ரூ.3 ரூபாய் குறைப்பு என கூறினார்.தற்போது தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது,அதில் தமிழக அரசு ரூ.6 ரூபாய் பால் விலையை ஏற்றியுள்ளது.அவ்வாறு ஏற்றிய விலையிலிருந்து ரூ.3 ரூபாயயை குறைத்துள்ளது.

இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த கோவத்தில் உள்ளனர்.பால் விலையை குறைப்பது போல குறைத்து எற்றியுள்ளார் என திமுக தலைவர் ஸ்டாலின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.இவர் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றுவது போல பாவனை செய்துவிட்டு எப்பொழுதும் இருப்பது போல மாற்றிவிடுகிறார் என பலர் பேசி வருகின்றனர்.இவ்வாறு பால் விலையை ஏற்றி அதிலிருந்து பால் விலையை குறைத்ததற்கு குறைக்காமலே இருந்திருக்கலாம் என மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.அதேபோல ஸ்டாலினிடம் மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலை வருமா என கேட்டனர்.அதற்கு ஸ்டாலின் மீண்டும் ஊரடங்கு போட்டால் மக்கள் தாங்க மாட்டார்கள் என கூறினார்.அதுமட்டுமின்றி முன்னாதாகவே ஊரடங்கு நிலவியதில் மக்கள் அனைவரும் பெருமளவு பொருளாதாரம் பாதிப்பு அடைந்துள்ளனர்.மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தினால் மக்கள் பெருமளவு பொருளாதார பாதிப்பிற்குள்ளவார்கள் என கூறினார்.இவ்வாறு கூறிய நிலையில் தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்.இதனால் மக்கள் அதிக கோவத்தில் உள்ளனர்.அதுமட்டுமின்றி தற்போது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடாத என ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.