கொந்தளிப்பில் பாமகவினர்! வைரலான போஸ்ட்! தட்டி தூக்கிய போலீசார்!

கொந்தளிப்பில் பாமகவினர்! வைரலான போஸ்ட்! தட்டி தூக்கிய போலீசார்!

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசரால் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த சின்னநாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவான பதிவுகளை போட்டுவந்தார். மேலும், பாட்டாளி மக்கள் கட்சி குறித்தும், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் தலைவர்கள் குறித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதில் உச்சபட்சமாக … Read more

கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

3 Crore fraud in co-operative bank!! Police action!!

கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் தான் வெள்ளரிவெளி. இந்த கிராமத்தில் தமிழக அரசு கூட்டுறவு துறைக்கு சொந்தமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் மக்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த சங்கத்தில் 55 வயதுடைய மோகன் என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்தார். அந்த சங்கத்தில் பயிர்கடன், நகைக்கடன், நீண்ட கால … Read more

தொடர்ந்து காவு வாங்கும் அரசு மதுபானம்!! திருச்சி அடுத்து சேலத்திலும் ஓர் உயிரிழப்பு!!

தொடர்ந்து காவு வாங்கும் அரசு மதுபானம்!! திருச்சி அடுத்து சேலத்திலும் ஓர் உயிரிழப்பு!! அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளில் உள்ள சரக்குகளால் தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலர் உடல்நலம்  பாதிப்படைந்தும் உயிரிழந்தும் வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் எடப்பாடி சேர்ந்த ஒருவர் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி சேர்ந்த சேகர் என்பவர் நேற்று மாலை கல்ளுக்கடை என்ற பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் சரக்கு ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு … Read more

கட்சி பணத்தை வைத்து ஆடாத ஆட்டம்! எடப்பாடிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!

கட்சி பணத்தை வைத்து ‘ஆடாத ஆட்டம்’. எடப்பாடிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கோடிகணக்கில் பணத்தை குவித்து வைத்து மாவட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கி வருவதாகவும், கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வருவதாகவும், கட்சி நிதியை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். நான் கட்சிப் பொருளாளராக பொறுப்பேற்றபோது ரூ. 2 கோடி பற்றாக்குறையாக இருந்தது. அதன்பின் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் ரூ. 253 கோடியாக நிதி இருப்பை உயர்த்திக் காட்டினேன்.  அந்த கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத … Read more

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு

எடப்பாடி நம்பிக்கை துரோகி! பன்னீர் காட்டமான பேச்சு. அதிமுகாவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சார்பில், திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா, அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழா மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டுக்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர் … Read more

குரங்கு கையில் பூமாலை! எடப்பாடி மீது ஓபிஎஸ் சாடல்!

குரங்கு கையில் பூமாலை! எடப்பாடி மீது ஓபிஎஸ் சாடல்!  அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமை இருந்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்தது. திரளான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கவே, அவர் பொதுக்குழுவை கூட்டி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினார். அத்துடன், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி, தற்காலிக பொதுச்செயலாளர் ஆனார். இதனை அடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய … Read more

அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி!

அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி! அதிமுக பொதுகுழு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி கிடைத்து வருகிறது. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அதை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் தனி நீதிபதி முன்பு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்று கூறிய நீதிபதி, தேர்தல் முடிவுகளை மட்டும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார். அதன் பின் நடந்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்று … Read more

சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை! சசிகலா அறிவிப்பு.

சாதி அரசியல் பார்த்து எடப்பாடியை முதல்வர் ஆக்கவில்லை – சசிகலா!! அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு தன்னை முழுவதுமாக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பிய சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக அனைவராலும் முன்மொழியப்பட்டு பதவி ஏற்று கொண்டார். இந்த நிலையில் எடப்பாடியை முதல்வராக்கிய சசிகலா பின்னர் நடந்த குளறுபடியால் சிறைக்கு செல்ல நேரிட்டது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை தன் வசம் கொண்டு வந்தார். அதன் பின்னர் பல்வேறு … Read more

மூக்கு கண்ணாடி வாங்குகிற செலவாச்சும் கம்மியாகட்டும்.. பெற்றோருக்காக உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி!!

let-the-cost-of-buying-nose-glasses-be-reduced-the-little-girl-who-took-her-life-for-her-parents

மூக்கு கண்ணாடி வாங்குகிற செலவாச்சும் கம்மியாகட்டும்.. பெற்றோருக்காக உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி!! எடப்பாடி அருகே சித்தூரில் கட்டிட தொழிலாளியின் 11ஆம் வகுப்பு பயிலும் மகள் பெற்றோர்களுக்கு மருத்துவ செலவு வைக்க கூடாது என கருதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி அருகே சித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மெய்யப்பன் மனைவி மக்களின் தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகள் திவ்யா … Read more

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்கள்! தேடும் பணி தீவிரம்!

young-people-drowned-near-salem-searching-is-intense

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்கள்! தேடும் பணி தீவிரம்! கடந்த சில தினங்களாகவே கனமழை முதல் மிதமான கனமழை வரை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றது.அதே போல் சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைப்பகுதியில் உருவாகி ஓமலூர் ,தாரமங்கலம் வழியாக எடப்பாடி பகுதியில் சரபங்கா நதி பாய்ந்து வருகின்றது.அண்மையில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து எடப்பாடி பகுதியில் பாய்ந்து வரும் சரபங்கா நதிக்கரைக்கு ,தினந்தோறும் பொதுமக்கள் மீன் பிடிக்கவும் ,குளிக்கவும் … Read more