அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி!

0
196
#image_title
அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி!
அதிமுக பொதுகுழு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு வெற்றி கிடைத்து வருகிறது. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது அதை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் தனி நீதிபதி முன்பு வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்று கூறிய நீதிபதி, தேர்தல் முடிவுகளை மட்டும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார். அதன் பின் நடந்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்  எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின்  பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டதாகவும், இரட்டை இலையை பயன்படுத்தி கொள்ளவும் அனுமதிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 26-ந் தேதி டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். மேலும் பாஜக தேசிய தலைவர்களையும் சந்தித்து பேசுவார் என்று கூறபப்படுகிறது.
அதிமுக பாஜக இடையே கூட்டணி தொடருவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உறுதி செய்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பதால் கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது.
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது மற்றும் முக்கிய விஷயங்கள் தொடர்பாக அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் ஆலோசனை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.