தமிழிசையின் ஏற்ற இறக்கமான பேச்சு!! கூட்டத்தில் என்ன கூறினார் தெரியுமா?

Fluctuating speech of Tamil music !! Do you know what was said at the meeting?

தமிழிசையின் ஏற்ற இறக்கமான பேச்சு!! கூட்டத்தில் என்ன கூறினார் தெரியுமா? கரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் இருந்தாலும் வரப்போகும் மூன்றாவது அலை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கேட்டுக்கொண்டார்.நேற்று புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சீராய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் துணைநிலை ஆளுநர் கூறியதாவது, தற்போது புதுச்சேரியில் 21 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது மிகவும் வருத்தத்திற்குரியது என்றார். நாம் அனைவரும் வெளியே செல்லும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் … Read more

திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன?

Governor

திடீரென ஆளுநரை சந்தித்த தலைமைச் செயலாளர் டிஜிபி! ஆளுநர் கூறியது என்ன? தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்றனர். அப்போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியானது. அதன்பின்னர், ஆலோசனையில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து விவாதித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா … Read more

புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் – தமிழ் வழியில் பயின்றவர்கள் மகிழ்ச்சி!

புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் - தமிழ் வழியில் பயின்றவர்கள் மகிழ்ச்சி!

அரசு வேலைவாய்ப்புகளில், தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை முறை படுத்துகின்ற சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். பட்டப்படிப்பு படித்து முடித்த பட்டதாரிகளுக்கான அரசு வேலை வாய்ப்புக்கு, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தகுதியும் மற்றும் பத்தாம் வகுப்பு தகுதிக்கான 6 முதல் 10 வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி … Read more

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் புதிய அறிவிப்பு! என்ன தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் புதிய அறிவிப்பு! என்ன தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ், மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, “நாட்டின் பணக்கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை” என்பதை அறிவித்தார்.  அதாவது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு தரும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அத்துடன் வங்கிகளின் வைப்புத் தொகைக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதையும் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் மாற்றம் … Read more

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு மூச்சு திணறல் காரணமாக கடந்த மாதம் 13ஆம் தேதி அன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு உடலில் வேறு சில பிரச்சனைகளும் இருந்துள்ளது. அதன்பிறகு அவருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடலில் சில முக்கிய உறுப்புகள் செயல்படுவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவரின் உடல் நிலை மிகவும் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு என்பது சட்டமானது – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு என்பது சட்டமானது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பல தரப்பில் கருத்துகள் பேசப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.  மதுரை உயர் நீதிமன்றம் நடப்பாண்டிலேயே உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பல கேள்விகளை முன்வைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்புகளில் அதாவது எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். உள்பட அனைத்து இளநிலை … Read more

ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!

ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான  உள்ஒதுக்கீடு, வழங்கும் படி அனைத்து தரப்பிலும் கோரிக்கை எழுப்பப் பட்டிருந்தது. அதையடுத்து அனைத்து கட்சி சார்பிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் கவுன்சிலிங் தொடங்க இருக்கிறது. நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடதக்கது.   ஆனால் ஆளுநர் இதுவரை … Read more

அதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்வி! அது என்ன கேள்வி தெரியுமா?

அதிமுக அமைச்சர் எழுப்பிய கேள்வி! அது என்ன கேள்வி தெரியுமா?

சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்புகளைச் சேர்ந்த சட்டப்பட்டதாரிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மொத்த சட்டப்பட்டதாரிகள் 63 நபர்கள் ஆகும். இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி, சிறப்புடன் நடத்திக் கொடுத்தவர் அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் ஆவார்.  அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே அனைவருக்கும் ஊக்கத் தொகையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவரிடம், ‘உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் … Read more

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஆளுநர்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஆளுநர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனிடையே சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று … Read more

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் யாருக்கு கொடுக்கப்பட்டது?

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் யாருக்கு கொடுக்கப்பட்டது?

அயோத்தியில் புதன்கிழமை அன்று நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் தலித் குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பூமி பூஜை நிகழ்வு முடிந்த பின் முதல் பிரசாதம் தலித் குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக … Read more