இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் புதிய அறிவிப்பு! என்ன தெரியுமா?

0
56

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ், மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது, “நாட்டின் பணக்கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை” என்பதை அறிவித்தார். 

அதாவது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு தரும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அத்துடன் வங்கிகளின் வைப்புத் தொகைக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பதையும் அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் அதே 4 விழுக்காடாகவே தொடர்ந்து நீடிக்கும் என்றும் அத்துடன் ரிசர்வ் வங்கியில் இதர வங்கிகள் வைத்திருக்கும் வைப்புத் தொகையின் மீது செலுத்த வேண்டிய வட்டி விகிதம் 3.35 விழுக்காடாகவே தொடர்ந்து நீடிக்கும் என்பதனையும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஒவ்வொரு வங்கிளும் தங்களின் வாடிக்கையாளர்களுக்குக் கடன் அளிப்பதற்கான குறைந்தபட்ச வட்டி விகிதமானது மாற்றம் ஏதும் இல்லாமல் 4.25 விழுக்காடு ஆகவே தொடர்ந்து நீடிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K