எல்லோருக்கும் பயன் தரும் 10 அசத்தலான வீட்டு குறிப்புகள்!

*வீட்டில் எறும்புப் புற்று இருக்கும் இடத்தில் சிறிதளவு பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. *துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டு அலசினால் கறைகள் போய்விடும். *பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது. *இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை கெடாமல் இருக்கும். *காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் … Read more

ருசியைக் கூட்டும் சூப்பரான சமையல் குறிப்புகள்..!!

*சாதம் வடிக்கும்போது சற்று குழைவது போல் தெரிந்தால், உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால், மேலும் குழையாமல் இருக்கும். *கீரை வகைகள் வேகும் போது அதிலிருந்து ஒரு விதமான நச்சுக் காற்று வெளியேறும். ஆகையால் கீரை வேகும் போது மூடி போட்டு மூடக் கூடாது. அவ்வாறு மூடினால் நச்சுக் காற்று கீரையிலேயே தங்கி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். *பாகற்காயை இரண்டாக நறுக்கி வைப்பதனால் சீக்கிரம் பழுக்காமல் இருக்கும். *பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து, அந்த பொடியை கலருக்காக … Read more

Kitchen Tips in Tamil: உப்பில் நீர் கோர்க்காமல் இருக்க எளிய டிப்ஸ்..!

Kitchen Tips in Tamil

Kitchen Tips in Tamil: நமது கிச்சனில் எது இருக்கோ, இல்லையோ கட்டாயம் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது உப்பு தான். ஒரு உணவிற்கு சுவையை தருவது எது என்று பார்த்தால் கட்டாயம் அது உப்பு தான். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பது பழமொழி. உப்பு இல்லாமல் ஒரு உணவு பொருள் சமைத்தால் கட்டாயம் அது குப்பைக்கு தான் செல்லும். பொதுவாக நாம் ஒரு இனிப்பு செய்தாலும் அதில் ஒரு பிஞ்ச் அளவிற்கு உப்பு சேர்த்தால் … Read more

குழம்பில் உப்பு, காரம் சற்று தூக்கலாக இருக்கா? அப்போ அதை சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ!

குழம்பில் உப்பு, காரம் சற்று தூக்கலாக இருக்கா? அப்போ அதை சரி செய்ய சூப்பரான டிப்ஸ் இதோ! என்னதான் 5 ஸ்டார்கள் கொண்ட உணவகங்களில் விருந்து சாப்பிட்டாலும் நம்முடைய வீட்டில் சமைத்த சாப்பாடு சாப்பிடுவது போல வராது. அனைவருக்கும் வீட்டு சாப்பாடு என்பது மிகவும் பிடிக்கும். ஏன் என்றால் வெளியே கிடைக்கும் உணவுகளில் இருக்கும் சத்துக்களை விட வீட்டில் சேமிக்கப்படும் உணவுகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. அதிக சத்துக்கள் இருப்பது போலவே சில சமயங்களில் நம்முடைய வீட்டு … Read more

எவ்வளவு கருப்பான எண்ணெய் படிந்த பாத்திரமாக இருந்தாலும் சரி! 2 நிமிடத்தில் அனைத்து கரைகளும் போய்விடும்!

எத்தனை தடவை பாத்திரத்தை தேச்சாலும் உங்களுடைய பாத்திரத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு போக வில்லையா? இதோ உங்களுக்கான அற்புதமான முறை முறை 1: 1. முதலில் ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும். 2. அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய பேஸ்ட் போட்டு கொள்ளவும். எந்த பேஸ்டாக இருந்தாலும் சரி பயன்படுத்தலாம். 3. ஒரு ஸ்பூன் அளவிற்கு சமையல் சோடா சேர்த்துக் கொள்ளவும். 4. முட்டையின் வெள்ளை ஓட்டை இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். 5. கொஞ்சமாக … Read more

ருசியை கூட்டும் சமையல் குறிப்புகள்!!

*கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்தால், கொழுக்கட்டை விரிந்து போகாமல் வரும். *ரவா, மைதா சேமித்து வைக்கும் டப்பாவில் கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சிகள் வராது. *கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும். *கறிவேப்பிலையை ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு காயாமல் இருக்கும். *தோசைக்கு மாவு அரைக்கும் … Read more

இல்லத்தரசிகளுக்கு பயன் தரும் அசத்தலான வீட்டு குறிப்புகள்!!

*மூக்குப் பொடியை தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்தால் எறும்பு தொல்லை இருக்காது. *வீடு துடைக்கும் முன் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து, பின் துடைத்தாள் ஈக்கள் தொல்லை இருக்காது. *சின்ன வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமலும் முளை வராமலும் இருக்கும். *வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். *கடலை எண்ணெயில் சிறிது புளியை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு எண்ணெய் கெடாமல் … Read more

இல்லத்தரசிகள் தெரிந்திருக்க வேண்டிய சில முக்கிய வீட்டுக் குறிப்புகள்..!!

*வெள்ளிப் பொருட்கள் உள்ள இடத்தில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் வெள்ளி பொருட்கள் கருக்காது. *சமையல் அறையில் எலுமிச்சை பழச் சாற்றினால் ஏற்படும் வெள்ளை கறையை நீக்க, அந்த இடத்தில் சிறிது வெண்ணையை தடவி சில மணி நேரம் கழித்து துடைத்தாள் கறை நீங்கி தரை பளிச்சென்று இருக்கும். *கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டு சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் கையில் மாவு ஒட்டாது. *கொஞ்சம் வசம்பை தட்டி, ரவா, மைதா, அரிசி உள்ள பாத்திரங்களில் போட்டு … Read more