அமெரிக்காவில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

அமெரிக்காவில் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ்  பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனித இனத்தையே அழித்து வருகிறது. இது சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் பல நாடுகளில் பரவி வந்தாலும் குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். மேலும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது.

பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு டிரம்ப் புதிய உத்தரவு

பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு டிரம்ப் புதிய உத்தரவு

டிரம்ப் சில மாதங்களாக சீனாவின் மீது வெறுப்பை காட்டி வருகிறார். அந்த வகையில் பைட்டான்ஸ் நிறுவனமானது சீனாவைச் சேர்ந்ததாகும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானது தான் டிக் டாக் செயலி  இந்த செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கலாம் என டிரம்ப் முடிவு செய்துள்ளார். இது மட்டுமில்லாமல் டிக்-டாக் நிறுவனத்துக்கு எதிராக புதிய உத்தரவு … Read more

தோனியை தொடர்ந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா

தோனியை தொடர்ந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு  இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதன்முறையாக இந்தியா அணிக்காக விளையாட தொடங்கினார். இதுவரை 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5615 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியா ரெய்னா 768 ரன்கள் எடுத்துள்ளார். … Read more

சுதந்திர தின தினத்தில் ஓய்வை அறிவித்தார் தோனி

சுதந்திர தின தினத்தில் ஓய்வை அறிவித்தார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் எம்.எஸ். டோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை இன்று வெளியிட்டார். டோனி  கடந்த 2004 ஆம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக முதன்முறையாக ஒரு நாள் சர்வதேச போட்டியில் இந்தியா அணிக்காக விளையாட தொடங்கினார். மேலும் இலங்கைக்கு எதிராக 2005 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில்  முதன் முறையாக தனது கணக்கை தொடக்கி வைத்தார். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய டோனி  கடந்த … Read more

உலகிலேயே அதிகமாக குற்றங்கள் நடைபெறும் நாடு?

உலகிலேயே அதிகமாக குற்றங்கள் நடைபெறும் நாடு?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து நாடுகளும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவில் இந்த பொது முடக்கத்தால் அங்கு குற்றங்கள் குறைந்துள்ளது. முதல் மூன்று மாதங்களில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை 40 சதவிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மதுபானம் தொடர்பான குற்றங்கள் குறைந்துவிட்டது.  மேலும் பாலியல் துன்புறுத்தல், தீச்சம்பவங்கள் உள்ளிட்ட பலவகையான குற்றங்கள் குறைந்துள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. உலகிலேயே அதிகமாக குற்றங்கள் நடைபெறும் நாடு தென்னாப்பிரிக்காதான் … Read more

பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே கப்பலை விட்டு சென்ற பயணிகள்

பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே கப்பலை விட்டு சென்ற பயணிகள்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள சொகுசுக் கப்பலில்  இருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பயணிகளை தரையிறங்க அனுமதித்த செயல் ஏற்றுகொள்ள முடியாதது என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. ரூபே பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலிலிருந்து மார்ச் மாதம் 2,700 பயணிகள் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். மேலும் உடல் நலம் சரியில்லாத பயணிகள் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே கப்பலை விட்டு சென்று  விட்டனர்.  இந்த சம்பவத்தையொட்டி விசாரணை நடத்தப்பட்டது.  ஆனால் இந்த சம்பவத்திற்கு தொடர்பானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் … Read more

இந்தியா – இங்கிலாந்து தொடரை நாங்கள் நடத்த தயார்

இந்தியா - இங்கிலாந்து தொடரை நாங்கள் நடத்த தயார்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் கிரிக்கெட் போட்டிகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை  எனில் இந்தியா இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகலாம். இங்கிலாந்து அணி … Read more

இங்கிலாந்து – பாகிஸ்தான் 3வது நாளிலும் மழை

இங்கிலாந்து - பாகிஸ்தான் 3வது நாளிலும் மழை

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 126 ரன்களுடன் பரிதவித்தது. பாபர் அசாம் 25 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்றைய ஆட்டம் மழையால் ஏறக்குறைய 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.  223 ரன்கள் எடுத்திருந்த போது … Read more

சேப்பாக்கத்தில் 5 நாட்களுக்கு நடைபெற உள்ள பயிற்சி முகாம்

சேப்பாக்கத்தில் 5 நாட்களுக்கு நடைபெற உள்ள பயிற்சி முகாம்

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கடந்த மே மாதமே நடக்க வேண்டிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. இதில் விளையாட போகும் சென்னை அணியினர் சேப்பாக்கத்தில் இன்று  பயிற்சி முகாம்  தொடங்க உள்ளது. இந்த பயிற்சி முகாம் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில்  கேப்டன் டோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இன்னும் சில முக்கிய வீரர்கள் நேற்று மாலை … Read more

ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை

ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை

தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படையினரை அந்நாட்டில் உள்ள உரூஸ்கான் மாகாணத்தில் திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் பாதுகாப்பு படையையினை சேர்ந்த ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.  மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். அந்நாட்டில் அரசுக்கு எதிராக நீண்ட வருடங்களாக தலீபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை. தலீபான் பயங்கரவாதிகளால் அடிக்கடி அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வபோது கண்ணிவெடிகளை … Read more