சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு! தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

Salem News in Tamil Today

சேலம் மாவட்டத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு! தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு சேலம் மாவட்டத்தில் தீடிரென பரவலாக மழை பெய்தது. இதனால் வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் உடைந்தது. தரைப்பாலம் உடைந்ததால் 10 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் லேசானது முதல் கனமழை வரை கொட்டி தீர்த்தது. இதுமட்டுமில்லாமல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து … Read more

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அடித்து மிரட்டல் விடுத்த 3 பேர் கைது 

Salem News in Tamil Today

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அடித்து மிரட்டல் விடுத்த 3 பேர் கைது ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் கிராமத்தின் வழியாக இரவில் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை ரவுடிகள் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்தில் 2 வாலிபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கில் தற்போது கொலை வழக்கில் சிக்கிய ரவுடி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் … Read more

திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி 

SR Parthipan - சேலம் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன்

திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி SR பார்த்திபன் – SR Parthipan சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மற்றும் சூரமங்கலம் உள்ளிட்ட மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சி கமிஷனர் கிருஸ்துராஜ் தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் 994 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 1166 சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 2160 நபர்களுக்கு வேட்டி, … Read more

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்!

Salem News in Tamil Today

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் , 10-வார்டு, மேலவீதியில் வசித்து வருபவர் மணி அவருடைய மனைவி அங்கம்மாள்.இந்த  தம்பதிகளுக்கு பாஞ்சாலை என்ற 24 வயது மகள் உள்ளார். தீடீரென  கடந்த 16 ஆம் தேதி முதல் பாஞ்சாலையை  காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கம்மாள் கெங்கவல்லி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் … Read more

வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு

Case filed due to Whats app conversation

வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு ஓமலூர் அருகே வாட்ஸ் அப் குரூப்பில் பெண் குறித்து விமர்சனம் செய்த வாலிபர் மீது கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யந்துரை. இவர் குடிநீர் விநியோகம் செய்யும் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த தொழிலாளிம் வேலாயுதம் என்பவருக்கும்,அய்யந்துரைக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரவாதம் உள்ளது. இந்த நிலையில் வட்டக்காடு பகுதியை … Read more

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி மறுப்பு! அதிருப்தியில் தொண்டர்கள் 

Put it like that Nana .. Edappadi Palanisamy who changed the post !!

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனுமதி மறுப்பு! அதிருப்தியில் தொண்டர்கள் பல நாட்கள் குழப்பத்திற்கு பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளது அக்கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவருடைய சொந்த மாவட்டமான சேலத்தில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக … Read more

கட்டவண்டி போல் உருண்டோடும் ரயில்கள்!! ரயில்வே பயணிகள் அவஸ்தை!!

Trains rolling like trains!! Railway passengers distress!!

கட்டவண்டி போல் உருண்டோடும் ரயில்கள்!! ரயில்வே பயணிகள் அவஸ்தை!! சேலம்  கோட்டம் அருகே ரயில்வே பாதை நடைபெற்று வருகிறது. கேரளா கோவை ஈரோடு வழக்கமாக வரும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே சற்று நிறுத்தி வருவதனால் காலை 10 மணிக்கு கோயம்புத்தூரில் புறப்பட்ட ரயில் மகுடஞ்சாவடி ரயில்வே நிலையத்திற்கு இரவு பத்து முப்பது மணிக்கு வந்து சேர்ந்தது. மேலும் ஈரோட்டில் மாலை 3 மணிக்கு ஏறிய  பயணிகள் மகுடஞ்சாவடியில் இரவு 10:30 மணிக்கு வந்தனர். இதனால் ரயில்வே பயணிகள் … Read more

சாவுற வயசுல மூணு பொண்டாட்டியா!! அனாதையாக உயிரிழந்த குடிமகன்!!

Orphaned deceased citizen !!

சாவுற வயசுல மூணு பொண்டாட்டியா!! அனாதையாக உயிரிழந்த குடிமகன்!! மேச்சேரி அருகே பானாபுரம் ஊராட்சி வீரப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவருக்கு வயது 70. இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகி உள்ளது. மூன்று முறை திருமணம் ஆகியும் ஒரு மனைவி கூட அவருக்குத் துணையாக இல்லை. தனியாகவே தன்னைப் பார்த்துக் கொண்டார். தானே சமைத்துக் கொண்டும் தன் உடைகள் அனைத்தையும் துவைத்து கொள்வார். இவர்களுக்கு பிள்ளைகளும் எவரும் இல்லை. இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமை ஆனவர்.அடிக்கடி குடித்துவிட்டு … Read more

சேலம் கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனை!! வியப்பில் ஆழ்ந்த பொது மக்கள்?

Salem News in Tamil Today

சேலம் கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனை!! வியப்பில் ஆழ்ந்த பொது மக்கள்? சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ்.இவர் சேலத்து கராத்தே மாஸ்டர் என புகழையும் பெற்றவர். கராத்தேவில் சிறந்த பயிற்சியாளர்.இவர் கின்னஸ் சாதனைகள் உட்பட 97 சாதனைகளை செய்தார். அதைத்தொடர்ந்து இவர் 98ஆவது சாதனையை நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் … Read more

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்!

Ration flour is for these restaurants in Salem! Convenient Trapped Suppliers!

சேலத்தில் இந்த உணவகங்களுக்கு ரேஷன் மாவு தான்! வசமாகிய சிக்கிய சப்ளையர்கள்! சேலத்தில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் கடத்தல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடந்த மாதம்தான் சேலத்தில் 34 டன் ரேஷன் அரிசி கர்நாடகாவிற்கு கடத்த முயன்றனர். தகவலறிந்த சூரமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தினர். தற்பொழுது மீண்டும் ரேஷன் அரிசி கடத்துவது தொடங்கியுள்ளது. சேலத்தில் பொன்னம்மாபேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் … Read more