திருவனந்தபுரம் அருகே படகு கவிழ்ந்து விபத்து! ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்!!

திருவனந்தபுரம் அருகே படகு கவிழ்ந்து விபத்து! ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்!!   கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே படகு கவிழந்து ஏற்பட்ட விபத்தில் நான்கு மீனவர்கள் கடலினுள் மூழ்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகின்றது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் கேரளா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் கேரளா மாநிலத்தில் சில இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!   கேரளா மாநிலத்தில் அடுத்த மாதம் ஓணம் பண்டிகை நடைபெறவுள்ளதை முன்னிட்டு கேரளமாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வளைகுடா நாட்டிற்கு முக்கியமான கோரிக்கையை   வைத்துள்ளார்.   கேரளா மாநிலத்தில் வருடம் தோறும் ஓணம் பண்டிகை மக்கள்  அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. கேரளா மாநிலம் மட்டுமில்லாமல் ஓணம் பண்டிகை தமிழகத்திலும் மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு அதாவது 2023ம் ஆண்டு ஓணம் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 28ம் … Read more

14 வயது சிறுவனிடம விடுதி வார்டன் பாலியல் துன்புறுத்தல்!! 

14 வயது சிறுவனிடம விடுதி வார்டன் பாலியல் துன்புறுத்தல்!! கேரளா மாநிலம் இடுக்கியில் அடிமாலியிலுள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த 14 வயது பள்ளி சிறுவனை அந்த விடுதி வார்டன் கல்லார்குட்டியை சேர்ந்த ராஜன் என்பவர் சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.இதனை வெளியில் சொல்லக்கூடாது என சிறுவனை மிரட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பைபிள் வகுப்பில்,கலந்து கொண்ட சிறுவன் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையை போன்ற சம்பவம் நடந்தால் உடனடியாக … Read more

இது தான் கேரளா மாநிலத்தின் உண்மையான கதை! வீடியோவை வெளியிட்ட வழக்கறிஞர்!!

இது தான் கேரளா மாநிலத்தின் உண்மையான கதை! வீடியோவை வெளியிட்ட வழக்கறிஞர்! பல சர்ச்சைகளுக்கு உள்ளான திரைப்படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிராக இது தான் உண்மையான கேரளாவின் கதை என்று கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் நடிகைகள் அடா சர்மா, யோஹிதா பிலானி, சோனியா பிலானி, சித்தி இட்னானி நடிப்பில் கடந்த மே மாதம் 5ம் … Read more

ஆவிகளிடம் பேச வைக்கிறேன்-நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதி கைது!!

ஆவிகளிடம் பேச வைக்கிறேன்- நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதி கைது! கேரளா மாநிலத்தில் ஆவிகளிடமும், தெய்வங்களிடமும் பேச வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த நபரிடம் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதியை போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்பு எல்லாம் ஆவிகளிடம் பேச வைக்கிறேன், உங்களின் முன்னோர்களின் ஆவிகளுடன் பேச வைக்கிறேன், இறந்து போன உங்கள் நண்பர்கள், தாய், தந்தை உறவினர்கடன் பேச வைக்கிறேன் என்று பல பேர் ஏமாற்றி பணங்களை மோசடி செய்து வந்தனர். தற்பொழுதும் இந்த … Read more

மலப்புரத்தில் நடத்த படகு விபத்து! இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

மலப்புரத்தில் நடத்த படகு விபத்து. இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு. கேரள மாநிலத்தில் மலப்புரத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இதையறிந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேற்று இரவு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படகு விபத்தில் காணாமல் … Read more

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கவர்னர் மாளிகை நோக்கி பேரணி!

Announcement made by the Chief Minister! Rally to the Governor's House!

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! கவர்னர் மாளிகை நோக்கி பேரணி! கேரளா மாநிலத்தில் பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு சிக்கல் தொடர்பாக மாநில அரசிற்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகின்றது.இந்நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக சட்டசபையில் மசோதா நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.அதனையடுத்து கவர்னரை கண்டித்து வருகிற 15 ஆம் தேதி கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த இடது முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் அரசியல் … Read more

ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் இரண்டாவது நாளாக  தீவிர விசாரணை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் இரண்டாவது நாளாக  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  சிவசங்கரனிடம் நடந்து வரும் விசாரணையில் கடத்தல் கும்பலுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தன்னிடம் ஸ்வப்னா சுரேஷ் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் கடத்தல் கும்பல் என தெரிந்திருந்தால் அவர்களுடனான தொடர்பை துண்டித்திருப்பேன் … Read more