போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா நடிகை நடிகர்களுக்கு தொடர்பு? போலீஸ் விசாரணையில் அம்பலம்!

0
194

தமிழ் சினிமாவான “நிமிர்ந்து நில்” படத்தின் கதாநாயகியான நடித்த பிரபல நடிகை ராகினி திரிவேதி சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நேற்று நடிகை சஞ்சனா கல்ராணி இதே வழக்கில் திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரிடமும் நடந்த விசாரணைக்குப் பிறகு இந்த போதை பொருள் கடத்தல்  விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா நடிகை நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.

சினிமா துறையில் நடத்தப்படும் பார்ட்டிகளில் இந்த போதைப்பொருள் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்படுவதாக சினிமா துறையிலேயே இருக்கும் நடிகைகள் மற்றும் இயக்குனர்களே போலீசாரிடம் புகார் அளித்து வருகின்றனர்.

எனவே மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் ஒரு குழு சென்னையில் முகாமிட்டு போதைப் பொருள் சப்ளை செய்யும் கும்பலை கூண்டோடு கைது செய்ய திட்டமிட்டுள்ளது.

அதேபோன்று   கேரளாவிலும் போதைப்பொருள் புழக்கத்தில் இருப்பதால் அங்கும் போலீஸ் முகாமிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இன்னும் இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பல நடிகை நடிகைகள் சிக்குவார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

 

Previous articleநீட் தேர்வுக்கு எதிராக உங்கள் குரல் அழுத்தமாக ஓங்கி ஒலிக்கட்டும்:! மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ஹேஸ்டேக்!
Next articleஆறு மாதத்திற்கு பிறகு துபாய்க்கு சென்ற கங்குலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here