அமெரிக்க அதிபர் குடும்பத்திற்குள் நுழைந்த நோய் தொற்று பரவல்!

0
77

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நோய்த் தொற்று பரவல் ,பின்பு மெல்ல, மெல்ல, பரவி முழுமையான வீரியத்துடன் தன்னுடைய பாதிப்பை அதிகரித்து வருகிறது.

இதுவரையில் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் தொற்று பரவியிருக்கிறது.

இதன் காரணமாக, நோய் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை உலக நாடுகள் பின்பற்றுவதை தவிர்க்கக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

சாமானிய மக்கள் முதல் மிகப்பெரிய உலகத் தலைவர்கள் வரையில் இந்த நோய் தொற்று பாதிப்புக்குள்ளாவாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய் தொற்று பரவல் வேகமிருந்து வருகிறது.

இந்த நோய் தொற்று பரவல் காரணமாக, அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலிருந்து வருகிறது. காரணம் இந்த நோய் தொற்று பரவலை சீனா தான் பரப்பியது என்ற தகவல் ஒருபுறமிருந்தாலும், சீனா இந்த நோயை அமெரிக்காவை குறி வைத்துதான் பரப்பியது என்றும், சிலரால் சொல்லப்படுகிறது.

இதுவரையில் அந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக 9,47,88,022 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், தற்சமயம் 36,89,780பேர் இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 10,62,770பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடனுக்கு நோய் தொற்று பாதிப்புக்கான லேசான அறிகுறி தென்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.

அவருடைய கணவரும், அமெரிக்காவின் அதிபருமான ஜோபைடன் 2வது முறையாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 2 வாரங்களுக்கு பிறகு தற்போது அவருடைய மனைவிக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.