கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமான வேலை பார்த்தால், பின்னாளில் அதிகமான சம்பளம் கிடைக்கும் – டிஜிபி!!

0
216
#image_title

கொடுக்கிற சம்பளத்தை விட அதிகமான வேலை பார்த்தால், பின்னாளில் அதிகமான சம்பளம் கிடைக்கும் – டிஜிபி!!

தற்போது உள்ள இளைஞர்கள் ஒரே வேலையில் நிலையாக இருப்பதில்லை பல கம்பெனிகளில் பணியாற்றியால்தான் இப்போதெல்லாம் மரியாதை என்ற நிலை வந்துள்ளதாக செயல்படு சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்

வேலையில் கவனமாக இருந்தால் நீங்களே ஆயிரம் பேருக்கு வேலை வழங்கலாம் என தெரிவித்தார்

குறைந்த சம்பளத்துடன் வேலை கிடைத்தாலும் பணியில் ஆர்வம் காட்டுங்கள், அறிவு தொழில்திறன் மனப்பான்மை நம்மிடம் குறைவாக உள்ளத

பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி வளாகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் நடைபெற்ற வேலை வாய்ப்பு மூலம் தேர்வுச் செய்யப்பட்ட தமிழ்நாடு காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் காவலர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் துணைவியார்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வழங்கினர்…

சிறைத்துறை, தீயணைப்பு துறை போன்ற காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்த காவலர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் துணைவியார்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் கடந்த மார்ச் 18 மற்றும் 19ல் நடைபெற்றது.
அதில் வாரிசுதாரர்கள் மற்றும் குடும்பத்தினர் 2541 பேர் கலந்து கொண்டனர். 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற நிலையில் அதில் 613 பேர் தனியார் நிறுவனங்களில் பல்வேறு பணிகளில் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது..

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சங்கர் ஜுவால்,

நாம் எவ்வளவு சம்பளம் வாங்குவோம் என நினைக்க கூடாது. வளாகத் தேர்வு மூலம் வேலை கிடைத்தால் மாதம் 15,000 முதல் 25,000 வரை கொடுக்கிறார்கள். வரும் காலத்திற்கு ஏற்ப திறனை வளர்த்து கொள்ளுங்கள். சென்ற ஆண்டு வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்கள் ஒரு வாரத்தில் வேலை விட்டு விட்டனர். பொறுமை இல்லை. முதலில் பணம் குறைவாக இருந்தாலும் திறமை வளர்த்து கொண்டால் நல்ல எதிர்காலம் இருக்கும். சம்பளம் அதிகரிக்கும். வெளி இடங்களில் சென்று வேலை பார்த்தால் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். இனி வருடம் தோறும் காவல் துறையில் பணிபுரிந்த வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்றார்…
தொடர்ந்து மேடையில் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு,
காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய ஓய்வு கொடுக்கப்படுவது விரிவுபடுத்தப்பட்டு
தற்போது ஆய்வாளர் உதவி ஆய்வாளர் வரை விடுமுறை கொடுக்கப்படுகிறது. காவல்துறையினர் இரவு ரோந்து பணி செய்வதெல்லாம் மிக கடினம். தமிழ்நாடு காவல் துறையில் வருடத்திற்கு சராசரியாக 300 காவலர்கள் மரணமடைகிறார்கள். அதில் 50 பேர் வாகன விபத்தால் மரண மடைகிறார்கள்… 50 பேர் தற்கொலை செய்கிறார்கள் .200 பேர் உடல் நலக்குறைவால் மரண மடைகிறார்கள். இதுவரை 2500 பேருக்கு காவல்துறையில் உயிரிழந்த வாரிசுக்கு அரசு வேலை கொடுத்துள்ளோம் அனைவருக்கும் அரசு வேலை கிடைத்து விடாது.

நாங்கள் பள்ளியில் படிக்கும் போது அரசு வேலை தான் முக்கியம் என்றனர். தற்போதுள்ள இளைஞர்கள் ஒரே வேலையில் நிலையாக இல்லை. பல இடங்களில் வேலை செய்தால் தான் இப்போதெல்லாம் மரியாதை என்ற நிலை வந்துள்ளது. கொடுக்கிற சம்பளத்தை விட நீங்கள் அதிகமான வேலை பார்த்தால், பின்னாளில் நீங்கள் பார்க்கிற வேலையை விட அதிகமான சம்பளம் கிடைக்கும் என கூறினார்.

வேலை இல்லாமல் சும்மா இருப்பது டேஞ்சரான விஷயம் சம்பளம் சின்ன சம்பளமாக இருந்தாலும் வேலையில் சேர்ந்து, திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.சிந்தித்து செயலாற்றக்கூடிய வேலைகளுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்பு இருக்கும் என கூறினார். வேலையில் கவனமாக இருந்தால் நீங்களே ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் நிலை வரும் என தெரிவித்தார்

அறிவு ,தொழில் திறன் மனப்பான்மை குறைவாக உள்ளது. அது தான் இந்திய இளைஞர்களின் தற்போதைய பிரச்சனையாக உள்ளது
உலகத்தில் அதிக கடன் வாங்கிய நாடு 1965ல் ஜப்பான். ஆனால் அடுத்த 10 வருடத்தில் வளர்ச்சி அமெரிக்காவை தாண்டியது… ((ஹூண்டாய் நிறுவனத்தின் கதை கூறினார்)) வளர்ச்சி. வேலை செய்தே செத்தால் ஜப்பானில் தியாகியாக பார்ப்பார்கள். அந்த மனப்பான்மையை வளர்த்து கொள்ள வேண்டும்.

எனக்கு முதல் மாத சம்பளம் 3500 ரூபாய் தான் வேலையை செய்வது தான் உண்மையான சம்பளம்… உங்களை வேலையை விட்டு எடுத்தால் வேலையே நடக்காது என்கிற நிலையை கொண்டு வாருங்கள். அப்போது நீங்கள் நினைத்த சம்பளம் அந்த நிறுவனத்தில் கிடைக்கும் என்றார்

author avatar
Savitha