பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட பன்வாரிலால் புரோஹித்! தமிழகத்தின் புதிய ஆளுநர் யார் தெரியுமா?

0
90

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அந்தக் கட்சிக்குள் பல்வேறு சிக்கல்கள் இருந்தது அதாவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த சமயத்தில் அந்த கட்சிக்கு யார் பொறுப்பேற்பது அடுத்த முதல்வர் யார் என்ற பல குழப்பங்கள் தமிழகத்தில் அரசியல் ரீதியாக நிகழ்ந்து வந்தது. இது அதிமுகவின் தனிப்பட்ட பிரச்சனை என்றாலும் கூட அதிமுக ஆட்சியில் இருந்த காரணத்தால், அந்த உட்கட்சி பிரச்சனை தமிழக அளவில் எதிரொலித்தது பல்வேறு விஷயங்களில் அது பிரதிபலிக்கவும் செய்தது.

அப்போது அந்தக் கட்சிக்குள் நடைபெற்ற உட்கட்சி பிரச்சினை தேசிய அளவில் கவனிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால், தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர் மறைவுக்குப் பின்னால் அவர் தலைமை தாங்கியிருந்த அதிமுக மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்து. இதனை நாடு முழுவதும் உற்றுநோக்கி கொண்டு இருந்தது.அதோடு இது தொடர்பாக அப்போது தமிழக ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் அவர்களுக்கும் தகவல் சென்றது மாநிலத்தில் ஆளும் கட்சி என்ற காரணத்தால், அவரும் இதில் தலையிட்டு ஒரு சில விஷயங்களை சரி செய்ய முயற்சி செய்தார்.

அதோடு மட்டுமல்லாமல் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இடையே இருந்த மனக்கசப்பு காரணமாக, இருவரும் பிரிந்திருந்த காலத்தில் அவர்களை ஒன்றிணைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது கடைசியாக ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் இடையே சமாதானம் ஏற்பட்டு ஓபிஎஸ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற சமயத்தில் அவர்கள் இருவரையும் ஒன்றிணைக்கும் பாலமாக மத்திய அரசின் சார்பாக செயல்பட்டவர் அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்.ஆனால் அவருக்கு தமிழகத்தில் பொறுப்பு ஆளுநர் என்ற பதவிதான் வழங்கப்பட்டிருந்தது அவர் மராட்டிய மாநிலத்தில்தான் முழுநேர ஆளுநராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், மிக நீண்ட தினங்களுக்குப் பின்னர் பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பிறகு அவரை முழுநேர ஆளுநராக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநராக பணிபுரிந்து வந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக தற்சமயம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக நாகாலாந்து மாநில ஆளுநராக இருக்கும் ரவிந்திர நாராயன் ரவி புதிய ஆளுநராக தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.சமீபத்தில்தான் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன்னால் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து இந்த சூழ்நிலையில், நேற்று குடியரசுத் தலைவர் வெளியிட்டிருக்கின்ற ஒரு உத்தரவில் இந்த ஆளுநர் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் இருக்கின்ற பாட்னாவில் பிறந்த ரவீந்திரன் ஆராயும் பிரவீன் கடந்த 1974-ஆம் ஆண்டில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் மற்றும் பத்திரிக்கை துறையில் கொஞ்ச காலம் பணிபுரிந்து அதன்பின்னர் 1976ஆம் ஆண்டு காவல் துறை தேர்வில் வெற்றி பெற்ற இந்திய காவல் பணியில் இணைந்தார். அவருக்கு கேரளா மாநிலம் ஒதுக்கப்பட்டது பத்து வருடங்களுக்கும் மேலாக கேரளாவில் மாவட்ட கண்காணிப்பாளர் உட்பட பல பதவிகளில் இருந்தார். அதன் பின்னர் சிபிஐயில் பணியாற்றிய சமயத்தில் இந்தியாவில் சுரங்க மாபியாக்கள் உட்பட பல முறைகேடுகளை கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுகிறது.

நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பு என்ற நிலையில் இருக்கும் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உளவுத்துறை பணியகத்தில் இருந்த சமயத்தில் அவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட விவகாரங்களை கையாண்டிருக்கிறார். அதோடு அவர் தெற்காசியாவில் மனித குடியேற்றத்தின் இயக்கவியலின் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். அதோடு எல்லை மக்களின் அரசியல் சமூகவியலில் விரிவாக பணியாற்றியிருக்கிறார்.

நாட்டில் பல ஆயுத கிளர்ச்சி குழுக்களை அமைதி வழி திருப்பியவர் ரவி என்று சொல்லப்படுகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அரசின் அவர் பிரதமரின் அலுவலகத்தில் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். உளவுத்துறை இளைஞர்களை ஒன்றிணைத்து வழிகாட்டினார் கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி அன்று நாகாலாந்து சமாதான பேச்சுவார்த்தையில் அவர் முக்கிய பங்கை ஆற்றி இருக்கிறார். அக்டோபர் மாதம் 2018 துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.

இதனடிப்படையில் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அங்கே இரு வருடங்கள் பணியாற்றிய சூழ்நிலையில், தமிழக ஆளுநராக தற்சமயம் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.இதற்கிடையில் தமிழக ஆளுநராக இருந்து தற்சமயம் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் பன்வாரிலால் ப்ரோஹித்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார்.

நேற்று இரவு தன்னுடைய வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்க இருக்கின்ற மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும், மரியாதையுடனும் வழி அனுப்பி வைக்கின்றோம். தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் இனிமையான நட்பு உங்களுடையது தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழி அனுப்புவது என கூறியிருக்கிறார்.தமிழகத்தின் புதிய ஆளுநராக காவல்துறை மற்றும் உளவுத் துறையில் மிக அதிக அனுபவம் கொண்ட ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் அரங்கில் ஒரு மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.