என் நிறம் கருப்பு:நான் கிரிக்கெட்டைக் காதலிக்கிறேன்!கொதித்தெழுந்த வீரர்!

0
103

என் நிறம் கருப்பு:நான் கிரிக்கெட்டைக் காதலிக்கிறேன்!கொதித்தெழுந்த வீரர்!

தென் ஆப்பிரிக்க அணியின் டெம்பா பவுமா தனது நிறம் குறித்து விமர்சிக்கப்படுவது ஆதங்கமாக பேசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியில் இட ஒதுக்கீடு முறை பின் பற்றப்படுகிறது. அதாவது ஒவ்வொரு தொடரின் போதும் தேர்ந்தெடுக்கப்படும் அணியில் குறிப்பிட்ட அளவு கருப்பின வீரர்கள் இருக்க வேண்டும் என்பதை விதியாகக் கொண்டுள்ளனர்.

அதுபோல எடுக்கப்படும் வீரர்கள் ஆடும் லெவனில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படும் கருப்பின வீரர்கள் ஊடகங்கலாலும் சக வீரர்களாலும் கேலி செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து ஆதங்கமாக பேசியுள்ளார் தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்கா அணிக்காக விளையாடி வரும் அவர் அவ்வப்போது காயம் காரணமாகவும் பார்ம் அவுட் காரணமாகவும் அணியில் இருந்து நீக்கப்படுவதும் பின்பு சேர்க்கப்படுவதுமாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 98 ரன்கள் அடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் தனது நிறம் மற்றும் உயரம் குறித்து கேலி செய்யப்படுவது குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவரது பேச்சில் ‘என் நிறம் கருப்பு. ஆனால் நான் கிரிக்கெட்டை காதலிக்கிறேன். நான் அணியில் இடம்பெறுவது எனது ஆட்டத் திறமைக்காகத்தான்.நான் இல்லாதபோது எனது நிறம் மற்றும் உயரத்தை வைத்து நான் கேலி செய்யப்படுகிறேன் என்பது தெரியும் போது சங்கடமாக உணர்கிறேன். பயிற்சியாளர் காலிஸ் நான் ஃபார்முக்கு வருவதற்கு பெரிதும் உதவினார். அவரது ஒட்டுமொத்த பேட்டிங் நுணுக்கத்தையும் எனக்குக் கற்றுக்கொடுத்தார்’ எனப் பேசியுள்ளார். பவுமாவின் பேச்சு அணிக்குள் நிலவும் நிறத்தாக்குதல்கள் பற்றி சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

author avatar
Parthipan K