அந்த நேர்மைதான் ஸ்பெஷல்! ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோஹித் சர்மா!

0
48

நேற்று முன்தினம் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனாலும் இந்திய அணியில் ருதுராஜ் கேய்க்வாட், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் ,உள்ளிட்டோருக்கு நொத்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் ரோகித் சர்மா இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அப்போது தான் அவர் திறமையின் அடிப்படையில் தீபக் ஹூடாவை அணிக்குள் கொண்டு வந்தார்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஹூடா,,க்ருணால் பாண்டியா, உள்ளிட்டோர் பெயர்களை டிரெண்டிங் செய்ய ஆரம்பித்தார்கள். அதாவது 2020 ஆம் வருடத்தில் இந்த இருவரும் பரோடா அணிக்காக விளையாடிய போது தீபக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில் தனக்கு கேப்டன் க்ருணால் பாண்டியா அதிகமாக அழுத்தம் கொடுப்பதாகவும், அனைத்து வீரர்களுக்கு முன் தன்னை அவமானப்படுத்துகிறார் என்றும் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து பரோடா கிரிக்கெட் வாரியம் க்ருணால் பாண்டியாவை நீக்காமல் குற்றம் தீபக் மீதுதான் இருக்கிறது என்று தெரிவித்து அவரை இடைநீக்கம் செய்தது.

அதன் பிறகு பரோடா அணியிலிருந்து தீபக் விலகினார். ஆனால் தற்சமயம் பாண்டியா சகோதரர்களும், ரோஹித் சர்மாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் கூட பாரபட்சம் பார்க்காமல் தீபக்கிற்கு அவர் விளையாடுவதற்கு முன்னுரிமை வழங்கியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அவருடைய நேர்மையை பாராட்டி வருகிறார்கள்.