14 வது தவணை வரவில்லை விவசாயிகள் வேதனை!! மத்திய அரசு வெளியிட்ட தகவல்

0
37
The 14th term has not come, farmers are suffering!! Information published by Central Government
The 14th term has not come, farmers are suffering!! Information published by Central GovernmentThe 14th term has not come, farmers are suffering!! Information published by Central Government

14 வது தவணை வரவில்லை விவசாயிகள் வேதனை!! மத்திய அரசு வெளியிட்ட தகவல்

தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. மேலும் தமிழக அரசு  விவசாயிகளை பெருமைபடுத்தும் வகையில் அவர்களுக்கு விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கிவருகிறது.

அதனை தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் இலவச மின் இணைப்பு போன்ற பல சலுகைகளும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டு பருவமழை அதிகரிப்பால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கபட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல மாநிலங்களில் அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த வகையில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6000 வழங்கப்பட்டு வருகின்றது. இது ஆண்டுதோறும் மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் பல விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் இனி பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி  யோஜனா திட்டத்தில் பயனடைந்து வரும் விவசாயிகள்  மத்திய அரசின் ஸ்கீமில் திட்டத்தில் இணையாமல் உள்ளார்கள்.  பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி  யோஜனா திட்டத்தில் மூலம் தவணை முறையில் ரூ 2000  வழங்கப்படும். அந்த வகையில் 13 தவணை வழங்கப்பட நிலையில் 14 வது தவணை வருகின்ற ஜூலை 27 ம் தேதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பி.எம்.கிசானின் கீழ் விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் 6,000 டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் இது பல விவசாயிகளுக்கு பணம் கிடைப்பதில்லை என்று புகார் எழுந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு விவரங்களில் ஏதேனும் தவறு இருக்கும் உடனே அதனை சரிபார்க்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

 

author avatar
Jeevitha