கே என் நேருவுக்கு கிடுக்குப்பிடி போட்ட தேர்தல் ஆணையம்! கதறும் திமுக!

0
95

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது இந்த நிலையில்,தேர்தலில் பண பட்டுவாடா செய்வதை தவிர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமானவரித் துறையினர் போன்றவற்றை வைத்து அதிரடி சோதனையை செய்து வருகிறது தேர்தல் ஆணையம்.இதன் மூலம் பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான பணம் பிடிபட்டது.அதோடு அனேக இடங்களில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்கள் உள்பட எல்லாவற்றையும் தேர்தல் ஆணையம் கைப்பற்றியிருக்கிறது.

இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே என் நேரு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 27ஆம் தேதி செய்தித்தாள்களில் திருவண்ணாமலை, திருச்சி மேற்கு மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் ரத்தாகிறது என்று செய்திகள் வர தொடங்கின.

இதே போல கே என் நேரு காவல்துறையினருக்கு பணம் கொடுத்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட வருவதை முன்னரே அறிந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது இதனையடுத்து. திருச்சி காவல் ஆணையாளர் லோகநாதன் திடீர் சோதனை மேற்கொண்டதில் சுமார் 6 காவல் நிலையங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு வெளியான செய்திகளால் திமுக தலைமை சற்றே கலங்கிப் போய் இருப்பதாக சொல்கிறார்கள். ஏற்கனவே மக்களிடையில் திமுகவின் பெயர் எக்கச்சக்கமாக இறைந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், இவ்வாறு ஒரு செய்தி வெளியானது திமுகவிற்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே இதுதொடர்பாக திமுக சார்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

அதோட உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் முதலமைச்சர் தலையீடு இன்றி வருவாய்த்துறை மற்றும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் சமயத்தில் காவல்துறையினர் விசாரணை வெளி வருவதற்கான வாய்ப்பே கிடையாது. இதுபோன்ற நடுநிலையான விஷயங்களில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதோடு தேர்தல் நேர்மையாக நடப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக அளித்திருக்கின்ற புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.