திருமணத் தடை நீக்கும் வேதபுரீஸ்வரர் திருக்கோவில்!

0
87

திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருக்கின்ற புகழ்பெற்ற திருவேற்காடு பகுதியில் ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது. நான்கு வேதங்களும் வேலை மரங்களாக இங்கே நின்று இறைவனை இங்கு வழிபட்ட காரணத்தால், இந்த தளம் வேற்காடு என்று பெயர் பெற்று இருக்கிறது. திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டு சிவாலயம் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

இந்த தளத்தில் இருக்கின்ற சிவன் சுயம்பு லிங்கமாக அருள் பாலித்து வருகிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்து இருக்கிறார்கள் என்பது தனிச் சிறப்பாக இருக்கிறது. இந்த தளம் நவக்கிரக தோஷங்கள் நீங்குவதற்கு உரிய ஒரு பரிகாரத் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த தளத்திற்கு அம்பிகையையும் திருவலிதாயம் பாலாம்பிகையையும் திருவெற்றியூர் வடிவுடையம்மன் ஒரே தினத்தில் சென்று வழிபடுவோர் இம்மை, மறுமை நலன்களை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிவபெருமான் ஒருமுறை பார்வதி தாயாரிடம் இந்த தளத்தை மனதால் நினைத்தாலும், ஒரு பொழுதாவது இங்கே தங்கி இருந்தாலும், இந்த தளம் வழியாக சென்றாலும் முக்தியை பெறுவர் என்று தெரிவித்திருக்கின்றார். பாற்கடலை விநாயகர் விழுங்கி விளையாடும் சமயத்தில் திருமால் தன் கையில் இருந்த வலம்புரி சங்கை தவற விட்டுவிட்டார். அதன் பின்னர் இந்த தல சிவனை வழிபட்டு அந்த சங்கை மீண்டும் பெற்றிருக்கிறார். திருமால் சுதர்சன சக்கரத்தை பெறுவதற்காக இந்த தளத்தை அடைந்து பூஜை செய்த சமயத்தில் உடனிருந்து ஆதிசேஷனும் இங்கே வழிபட்டு இந்த தளத்தின் எல்லை வரையில் வாசம் செய்பவர்களை தீண்ட மாட்டேன் என்று தெரிவித்ததாக வரலாறு தெரிவிக்கிறது. அன்றிலிருந்து இந்த தளத்தில் யாரும் பாம்பு கடித்து இறந்தது கிடையாது என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த தளத்திற்கு விடம்தீண்டாப்பதி என்ற பெயரும் இருக்கிறது.

மகா சிவராத்திரி அன்று திருவாதிரை பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் மிகச் சிறப்பாக இந்த திருத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது. இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்கிறார்கள்.