ரீ ரிலீஸ் ரேஸில் அஜித்தின் இந்த படம்!! மே 1 ஏகே ரசிகர்களுக்கு “தல” தீபாவளி தான் போங்க..!!

0
31
This film of Ajith in re-release race!! May 1st is
This film of Ajith in re-release race!! May 1st is "Thala" Diwali for AK fans..!!

ரீ ரிலீஸ் ரேஸில் அஜித்தின் இந்த படம்!! மே 1 ஏகே ரசிகர்களுக்கு “தல” தீபாவளி தான் போங்க..!!

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அஜித் மே 1 இல் தனது 53 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.1993 ஆம் ஆண்டு வெளியான “அமராவதி” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகனாக அறிமுகமான அஜித் அவர்கள் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

அதன் பின்னர் காதல் கோட்டை,வாலி என்று வெற்றி படங்களில் நடித்து காதல் மன்னனாக வலம் வந்த இவர் தீனா படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கினார்.பின்னர் சிட்டிசன்,வில்லன்,வரலாறு,கிரீடம்,பில்லா போன்ற ஆக்ஷன் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

அஜித்தின் திரைப்பயணத்தில் ‘மங்காத்தா’ மறக்க முடியாத படம்.வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி வணீக ரீதியில் வசூலை வாரி குவித்தது.ஆண்டிஹீரோவாக நடித்த அஜித் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை குஷி படுத்தினர்.சூதாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ஏசிபி விநாயக் மகாதேவாக அஜித் நடிக்க அவருடன் இணைந்து அர்ஜுன்,த்ரிஷா,பிரேம்ஜி,வைபவ் என்று நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

படத்தில் இடம் பெற்றிருந்த பைக் ஸ்டண்ட் காட்சி,அஜித்தின் “Money Money Money” மற்றும் “நானும் எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்குறது” என்ற டயலாக் இன்று வரை பேமஸான ஒன்றாக இருந்து வருகிறது.

ஏகன்,அசல் படங்களின் தோல்விக்கு பின்னர் வெளியான மங்காத்தா ரூ.24 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.100 கோடி வசூலை வாரி குவித்தது.

இந்நிலையில் மே 01 இல் அஜித் தனது 53 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.இதனை முன்னிட்டு 13 ஆண்டுகளுக்கு பிறகு மே 01 அன்று ‘மங்காத்தா’ ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

ஏற்கனவே விஜய்யின் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்து வரும் நிலையில் தற்பொழுது அஜித்தின் மங்காத்தா படமும் இந்த ரீ ரிலீஸ் ரேஸில் பங்குபெற இருக்கிறது.இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.