இந்த கனிக்கு இவ்வளவு மருத்துவ குணம்!! தினமும் நெல்லிக்காயை உண்பதால் பல நன்மைகள்!!

0
144
#image_title

இந்த கனிக்கு இவ்வளவு மருத்துவ குணம்!! தினமும் நெல்லிக்காயை உண்பதால் பல நன்மைகள்!!

நெல்லி இந்திய மருத்துவ துறையில் வெகுவாகப்  பயன்படுத்தப்படுகிறது. இது உயரமான இலையுதிர் காலம் மரமாகும். இதனின் காய்கள் சதைப் பற்று , உருண்டையாக, 6 பிரிவாக பிரிந்தும், பசுமை நிறத்திலும், மஞ்சளாகவும் காணப்படுகிறது. நமது நாடு தட்ப வெட்ப வானிலை கொண்ட ஒரு நாடு என்பதால் பலவகை காய்கறிகளும் கனிகளும் அதிகம் விளைகின்றன. அந்த காய்கள் மற்றும் கனிகள் அனைத்துமே உண்பவர்களுக்கு நன்மையை அளிக்கிறது. நமது நாட்டில் அதிகம் விளையக்கூடிய  மருத்துவ குணமும் மிக்க காய் அல்லது கனியாக கருதப்படும் நெல்லிக்காய் இருக்கிறது. இதனை நெல்லிக்கனி எனவும் அழைக்கின்றார்கள். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் சிறப்பு குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. அப்படி நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி உண்பதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.

சரும பொலிவு

நெல்லிக்கனி அதிகம் சாப்பிட்டு வந்தால் தோலில்  உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோல் சுருக்கம் தடுத்து இளமை தோற்றத்தை தருகிறது. இதில் நிறைந்திருக்கும் விட்டமின் சி சத்து சருமத்திற்கு இலகுவான தன்மையும் தருவதோடு தோல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு வாரம் நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு பளபளப்பு சருமம் ஆகியவற்றைப் பெறலாம்.

இதய நோய்

அனைத்து பகுதிகளிலும் ரத்தத்தை அனுப்புவதற்கு உதவியாக இருப்பது இதயம். இதயத்தின் செயல்பாடு எப்போதும் சீராக இருக்கின்ற வகையில் உதவக்கூடிய இயற்கை உணவு நெல்லிக் கனியாகும். நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிடும் போது அதில் உள்ள புளிப்பு தன்மை கொண்ட ரசாயனங்கள் இதயத்தின் ரத்த அதிகரிக்கிறது, அடைப்பு போன்றவை ஏற்படுவதையும் தடுக்கிறது. மேலும் நெல்லிக்காயில் குரோமியம் சத்து அதிகமாக காணப்படுகிறது.

சிறுநீரக பிரச்சனை

உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு சிறுநீரகம் உதவியாக இருக்கிறது. சிலருக்கு சிறுநீரகம் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த நெல்லிக்கனியை இயற்கையிலேயே சிறந்த சிறுநீரக பெருக்கை ஏற்படுகிறது. நெல்லிக்கனியில் இருக்கும் சாறு சிறுநீரகங்களில் படிக்கின்ற சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்களை கற்களாக மாற்றுவதை தடுத்து சிறுநீரை வெளியேற்றுகிறது.

கண் பிரச்சினை

நம்முடைய உடலில் முக்கியமான உறுப்புகள் கண் நெல்லிக்காயில் பலவகை விட்டமின் சத்துக்கள் உள்ளது. குறிப்பாக நெல்லிக்காயில் விட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது.

எலும்புகள்

நெல்லிக்கனியில்  எலும்பு வளர்ச்சிக்கு தேவையான விட்டமின்கள் பொட்டாசியம் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது நெல்லிக்காயை சாப்பிடுவதால் எலும்பு வலிமை அடைகிறது.

மஞ்சள் காமாலை

கல்லீரலில் வைரஸ் கிருமி பாதிப்பு ஏற்படும் போது மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. கல்லீரல் ஏற்படும் சிறுமி தொற்று மஞ்சள் காமாலை நெல்லிக்கனியை உண்பதால் ஈரலில் இருக்கும் கிருமிகள் அழிந்து மஞ்சள் காமாலை குணமாகும்.

வயிற்றுப்புண்

தற்போது அனைவருக்கும் வயிற்றுப்புண் ஏற்படுகிறது. நெல்லிக்கனி தினமும் சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்புண் வயிறு சம்பந்த பல பிரச்சினைகள் நீங்கும்.

இதுபோன்ற பல நன்மைகள் நெல்லிக்கனியில் இருப்பதால் தினமும் காலையில்  உண்பதால் பல்வேறு பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.

author avatar
Jeevitha