இதுதான் புதிய இந்தியாவின் வரைபடமா? மோடியின் ஒன் நேசன் திட்டம் நிறைவேறியதா?

0
97

புதிய இந்தியா என ஒரு வரைபடம் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

கஷ்மீர் பிரச்சனைக்கு இன்று நாடாளுமன்றத்தில் தீர்வு எட்டபட்டதாக பிஜேபி தரப்பில் தெரிவித்தனர். இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அப்பொழுது அவர் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

காஷ்மீரில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக ஜம்மு & காஷ்மீர் மாநில ஆளுநரை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு & காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ தனக்கு எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று கூடியது உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமையில். ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது. இதனால் புதிய இந்தியா என்ற வரைபடம் ஊடகங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K