அச்சுறுத்திவரும் புதிய வகை வைரஸ் தொற்று! மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை!

0
68

தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்று பரவலான ஒமிக்ரான் தற்சமயம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்த நோய்த்தொற்றுக்கு பயந்து பல நாடுகள் தங்களுடைய எல்லைகளை மூடி வைத்து இருக்கின்றன. தென்ஆப்பிரிக்காவுக்கு ஆன விமான சேவைகளும் ரத்து செய்து இருக்கின்றன இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் முன்னெடுத்து வருகிறது.

தமிழ்நாட்டிலும் இந்த நோய்த்தொற்று வந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் மாநில அரசும் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இந்த வைரஸ் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் காணொளி மூலமாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது மற்றும் நோய் தொற்றுவது தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை செய்து இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.