இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் பெரும் புள்ளிகள்!

0
78
#image_title

இன்று வேட்புமனுவை தாக்கல் செய்யும் பெரும் புள்ளிகள்!

 

இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் பெரும்பான்மையான தமிழக அரசியல் கட்சி வேட்பாளர்கள்.

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் 27 ஆம் தேதியான நாளை மறுநாள் வரை காலஅவகாசம் அளித்துள்ளது தேர்தல் ஆணையம்.

 

இந்த நிலையில் திங்கட்கிழமையான இன்று திமுக,அதிமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 

அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் பகல் 12 மணி முதல் 1மணி வரை தங்களது வேட்பு மனுவை தேர்தல் ஆணையததிடம் தாக்கல் செய்யுமாறு அதிமுக தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னையில் உள்ள மூன்று தொகுதியிலும் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்கள், பாஜகவை சேர்ந்த எல். முருகன் உள்ளிட்டோரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

 

வேட்பு மனு தாக்கல் செய்ய 3மணி வரை தான் காலஅவகாசம் 3மணிக்கு மேல் தேர்தல் அலுவலகத்தில் யாருக்கும் அனுமதி இல்லை, மேலும் வேட்புமனு தாக்கல் செய்பவர்களுடன் ஐந்து நபர்கள் மட்டுமே வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

 

மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என அறிவித்துள்ளது, மார்ச் 30ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகவும் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.