அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!

0
74
#image_title

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஒன்றுதிரலும் இந்தியா கூட்டணி!

 

கடந்த 2021, 2022ஆம் ஆண்டு கண்டு வரப்பட்ட மதுபான கொள்கை வழக்கில் பல குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், பல கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அதனை அமலாக்கதுறை எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

 

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையிலும் அவர் ஆஜர் ஆகாததால் அவரை மார்ச் 21ஆம் தேதி இரவு கைது செய்தது அமலாக்கதுறை.

 

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன், மணிஷ் சிஷோடியா, சத்யேந்திர ஜெயின், பிஆர்எஸ்ஸின் கவிதா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 

மார்ச்21 ஆம் தேதி இரவே இதனை அவசர வழக்காக கருதி விசாரணை நடத்த ஆம்ஆத்மி சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில் உச்சநீதிமன்றம் அதனை மறுத்தது, எனவே இன்று அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டது.

 

பிறகு மார்ச் 28ஆம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரித்து அமலாக்கதுறை.

 

கைது செய்யப்பட்டதும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சிறையில் இருந்துக்கொண்ட தனது முதலமைச்சர் பதவியை தொடர்வார் என ஆம்ஆத்மி கட்சி, அந்த வகையில் டெல்லியில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினையை சரிசெய்ய உத்தரவிட்டுள்ளார் அரவிந்த கெஜ்ரிவால்.

 

தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவருக்கு ஆதரவாக வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கண்டன போராட்டத்திற்க்கு இந்தியா கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது ஆம்ஆத்மி கட்சி.

 

இந்த போராட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.