பாஜக இதுவரை வெற்றி பெறாத தொகுதியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சார துவக்கம்!

0
172
#image_title

கர்நாடக தேர்தல் வரலாற்றில் பாஜக வெற்றியே பெற்றிடாத தொகுதியிலிருந்து தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி உள்ளார். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தேர்தலையொட்டி பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று கர்நாடகா வருவதுடன் தேவனஹள்ளி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாலை பேரணியில் பங்கேற்றார். கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஏற்கனவே அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கி விட்டன.

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி கடந்த வாரம் கோலார் மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் இன்று கர்நாடக தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை சாலை பேரணி மூலமாக தொடங்குகினார்.

மத்திய உள்துறை அமைச்சர் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவதன் மூலம் தங்கள் கட்சிக்கு மறைமுகமாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில், கர்நாடக தேர்தல் களத்தில் உள்ள பாஜகவுக்கு நேரடி பிரச்சாரத்தை நேற்று தொடங்குகினார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று கர்நாடக வரும் அமித்ஷா பிற்பகல் 3 மணிக்கு பெங்களூருவின் புறநகர் பகுதியான தேவனஹல்லி கணேசா சர்க்கிளில் இருந்து கோலார் சாலைவரை சாலை பேரணி நடத்தி தனது பிரச்சாரத்தை தொடங்குகினார்.

அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் தேவனஹள்ளியில் இதுவரை பாஜக வெற்றி பெற்றதே இல்லை என்பது தான் வரலாறு. அதுமட்டுமல்ல பாஜகவால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வரும் திப்பு சுல்தான் பிறந்த இடமும் இதுதான்.

ராஜதந்திரி என்று அழைக்கப்படும் அமித்ஷா தனது அதிகாரபூர்வ கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தை தேவனஹள்ளியில் தொடங்க இருப்பது கர்நாடக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு சாலை பேரணி தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து பாஜக நிர்வாகிகளுடன் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் பெங்களூரில் தங்கும் அவர் இன்று காலை தனியார் ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

author avatar
Savitha