நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிலை என்ன? விளக்கம் அளித்த பிரேமலதா விஜயகாந்த்!

0
82

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக போட்டியிட்டது. அந்த தேர்தலில் திமுகவை விழுத்தி எதிர்க்கட்சி என்ற இடத்திற்கு தேமுதிக வந்தது, அந்த சமயத்தில் அந்த கட்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

அதோடு ஆளும் கூட்டணியில் இருப்பதால் அதிகாரமும் கைவசம் இருந்தது, ஆனால் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள தெரியாத விஜயகாந்த் அடுத்தடுத்த தேர்தல்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் விரோத போக்கை கடைபிடித்தார். இதனால் அடுத்தடுத்த தேர்தல்களில் அந்தக் கட்சியால் பெரிதாக சோபிக்க முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேமுதிக மறுபடியும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முனைந்தது, ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவாகவில்லை. அதற்கு காரணமும் தேமுதிகவின் நிலைப்பாடு தான் என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மனைவியும் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய மூத்த மகன் விஜய பிரபாகரனுடன் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை சமாளிக்க இயலாமல் சாமானிய மக்கள் தவித்து வருகிறார்கள். விலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்க விஷயம் என்று கூறியிருக்கிறார்.

கட்டுமானப் பொருட்களான கம்பி, ஜல்லி, சிமெண்ட் மற்றும் செங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலையும் 40 சதவீதத்திற்கும் அதிகமாக எகிறி இருக்கின்றது, இதன் காரணமாக, அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாமல் நடுத்தர மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆகவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு தொடர்பாக அந்த சமயத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் திமுக அரசும் தற்சமயம் முறையில் நடுநிலையாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று குறைவான நாட்களே ஆகி உள்ளதால் இப்போதைக்கு சாதகமான நிலையில், இல்லை பாதகமான நிலையும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.