வரும் காலங்களில் அமோக விற்பனை ஆகும்!!!

0
62

கொரோனா தாக்கத்தால் பெரும் சரிவை கண்ட வாகன உற்பத்தியாளர்கள் தற்போது பண்டிகை காலம் வருவதால்  கார், பைக் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கும் என்று வாகன  உற்பத்தி நிறுவனங்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதனால் மாருதி சுசுகி, ஹோண்டா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் எதிர்காலத்தில் பல்வேறு வாகனங்களுக்கான தேவை அதிகரித்து அவற்றின் விற்பனை சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால் கடந்த மே மாதத்தில் இருந்து ஜூன் வரையிலான இடைப்பட்ட காலத்தில் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

வரும் மாதங்களில் பண்டிகைகள் அதிகம் இருப்பதால் ஆகஸ்ட் மாதத்திலிருந்து வாகன விற்பனை மேலும் வேகம் எடுக்கும் என்று  முன்னணி கார்நிறுவனமான மாருதி சுசுகி நம்பிக்கை தெரிவித்தது.

மேலும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகும் புதிய தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வந்தது.

அந்த வகையில் வரும் மாதங்களில் சந்தையில் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் வாகன உற்பத்தியை சூடு பிடிக்க உதவும் என்றும் 95 விநியோக மையங்கள்  செயல்பாட்டில் உள்ளதாக  வாகன உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

 

author avatar
Parthipan K