பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்களுக்கு முக்கிய கட்டளையிட்ட விஜயகாந்த்!

0
66

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றார். ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 69 ஆவது பிறந்த தினம். இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில் நோய்த்தொற்று காரணமாக, தொண்டர்கள் யாரும் பிறந்தநாள் அன்று நேரில் வர வேண்டாம் என்றும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுங்கள் என்றும், மிக விரைவில் மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக, அவருடைய பிறந்தநாளான இன்று அவருடைய பிறந்தநாளை மிக எளிமையாக தன்னுடைய குடும்பத்துடன் கொண்டு இருக்கின்றார். பிறந்தநாளன்று யாரும் நேரில் வர வேண்டாம் என்று தெரிவித்தார். கட்சித் தொண்டர்கள் கோவில்களில் அவருடைய பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்கள்.தர்மபுரி மாவட்டத்தில் சாலை விநாயகர் கோவிலில் தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் விஜயகாந்த் பெயரில் அர்ச்சனை செய்து சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. அதோடு தர்மபுரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் வெட்டி அவருடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள். தற்போது 69 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வலைதள பக்கத்தில் தேமுதிக தலைவரும் தமிழ் மக்களின் அன்பிற்கு உரிய கதாநாயகனான நண்பர் விஜயகாந்த் நீண்ட நாட்கள் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியுடன் வாழ அவருடைய பிறந்த நாளில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டு விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கின்றார்.

அதேபோல மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன்னுடைய வலைதள பக்கத்தில் எளியோருக்கு பாதிப்பு என்றால் தன்னால் இயன்றதை அதிரடியாக உடனடியாகவும் செய்பவர் விஜயகாந்த் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில், தன்னுடைய வீட்டில் பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாடிய புகைப்படத்தை விஜயகாந்த் பகிர்ந்து இருக்கின்றார்.