நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது! திட்டமிட்டபடி உளவு செயற்கைகோள் அனுப்பப்படும்! வடகொரியா அறிவிப்பு!

0
177
#image_title

நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது! திட்டமிட்டபடி உளவு செயற்கைகோள் அனுப்பப்படும்! வடகொரியா அறிவிப்பு!

நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது. திட்டமிட்டபடி உளவு செயற்கை கோள் அனுப்பப்படும் என்று வடகொரியா அறிவித்துள்ளது.

தென்கொரியா நாட்டுடன் அமெரிக்கா நாடு சேர்ந்து முறையற்ற இராணவு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முறையற்ற பயிற்சிகளுக்கு உளவு செயற்கைகோள் தேவையான ஒன்று என வடகொரியா அரசு அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி மே 31ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதிக்குள் உளவு செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் என்றும் வடகொரியா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வடகொரியா அரசு ஜப்பானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜப்பானுக்கு வடகொரியா அனுப்பியுள்ள நோட்டீசில் “இராணுவ உளவு முயற்சியின் அங்கமாக முதல் முறையாக செயற்கை கோள் ஒன்று விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த செயற்கை கோள் மஞ்சள் கடல், கிழக்கு சீன கடல், பிலிப்பைன்சின் கிழக்குப் பகுதியில் உள்ள லூசோ தீவுகளின் கடல் நீர் ஆகியவற்றை பாதிக்க செய்யலாம் என்று அந்த நோட்டிசில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜப்பான் எல்லைக்குள் வடகொரியாவின் செயற்கோள் நுழைந்தால் உடனே சுட்டு வீழ்த்த வேண்டும் என்று ஜப்பான் இராணுவத்திற்கு அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் யசுகாசு ஹமடா அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு துவங்கியதில் இருந்து வடகொரியா சுமார் 100 ஏவுகனைகளை சோதனை செய்துள்ளது. வடகொரியாவின் இந்த ஏவுகனை சோதனை தென் கொரியா மற்றும் ஜப்பான் பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

நீண்டதூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்டுத்த ஐ.நா சபை தடை விதித்திருக்கும் நிலையில் தடையை மீறி ஏவுகணையை விண்ணில் அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளது.

ஐ.நா சபை விதித்திருக்கும் தடையை மீறி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணையை விண்ணில் அனுப்புவது தங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயல் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த முடிவு ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் கடல் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.