வெள்ளிக் கிழமையன்று ஆண்கள் மற்றும் பெண்கள் செய்யக் கூடாதவை?

0
223

வாரத்தின் ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமையே பெரும்பாலும் தெய்வத்திற்கு உகந்த நாளாக அனைவரும் கடைபிடிக்கின்றனர்.80 சதவீத பெண்கள் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தப்படுத்தி விரதமிருந்து தெய்வ வழிபாடுகள் செய்வார்கள். இவ்வளவு தெய்வீகம் வாய்ந்த இந்த வெள்ளிக்கிழமை நாளன்று சிலவற்றை நாம் செய்யக்கூடாது அது என்ன என்பதனை பற்றி காண்போம்.

வெள்ளிக்கிழமை அன்று யாருக்கும் கடன் கொடுக்க கூடாது அப்படி கொடுத்தால் வீட்டில் உள்ள லட்சுமி போய் விடுவாள் என்பது அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றாகும்.

அதேபோன்று சிலவற்றை பெண்களும் ஆண்களும் வெள்ளிக்கிழமை அன்று செய்யக்கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் செய்யக் கூடாதவை?

வெள்ளிக்கிழமை அன்று அடுப்புகளை துடைக்கக் கூடாது வியாழக்கிழமை இரவே துடைத்து வைத்துவிடுவது நல்லது.

வெள்ளிக்கிழமை என்றால் அனைத்து பெண்களும் வாசலில் கோலம் போடுவர் அவ்வாறு போடும் கோலம் புள்ளி வைத்து போடக்கூடாது ரங்கோலி கோலம் போடுவது நல்லது.

வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் வீட்டில் ஒட்டரை அடிக்கக் கூடாது இதுவும் முன்னாடி நாளை செய்துவிடவேண்டும்.

அதேபோன்று வெள்ளிக்கிழமை அன்று அழுக்கு துணிகளை சேர்த்து வைக்கக் கூடாது குளித்த உடனே உடனுக்குடன் துடைத்துவிட வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று பூஜை பொருட்களை விளக்கவும் அல்லது தொடைக்கவும் கூடாது பூஜை பொருட்களை சுத்தம் செய்வதற்கு உகந்த நாள் வியாழக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை ஆகும்.

வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களை கழட்டுவதோ அல்லது கழட்டி சுத்தம் செய்வதோ கூடாது.அன்னாளில் ஆபரணங்களை பிறருக்கு கடன் கொடுக்கக் கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று ஆண்கள் செய்யக் கூடாதவை?

வெள்ளிக் கிழமையில் ஆண்கள் எண்ணை தேய்த்து குளிக்க கூடாது.

அதேபோல் முடி வெட்டுவதும் முகசவரம் செய்வதும் கூடாது.

வெள்ளி கிழமை அன்று தேவையற்ற செலவுகளை செய்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

author avatar
Pavithra