பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்!

0
154
will-petrol-and-diesel-prices-go-up-again-people-in-shock
will-petrol-and-diesel-prices-go-up-again-people-in-shock

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வா? அதிர்ச்சியில் மக்கள்!

இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் அறிவிப்பில் பல பொருட்களின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்தது.இந்நிலையில் அதில் மக்களின் அதிக அளவு கோரிக்கையாக பெட்ரோல் டீசலின் விலையை குறைக்கும் படி தான் இருந்தது.தங்கத்தின் விலையை குறைத்து இதர பொருட்களின் விலையை ஏற்றிவிட்டனர்.ஓராண்டு காலமாக கொரொனோ தொற்றால் உலகமே ஊரடங்கு காரணத்தினால் வேலைவாய்புகள் இன்றி முடங்கி கிடந்தது.

இந்நிலையில் பாமர மக்கள் கையில் எவ்வித பணமும் இல்லை  அவர்கள் தங்கம் எடுக்கும் நிலையிலும் இல்லை.ஓர் நாள் வாழ்க்கையை ஓட்டவே சிரமப்பட்டு கொண்டிருக்கும் வேலையில் இந்தியாவின் பட்ஜெட் தாக்கலை நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.இதில் ஏதும் மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை.மேலும் இதில் அதிக அளவு பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தியுள்ளனர்.இதனால் பாமர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுயிருக்கின்றனர்.

மேலும் அனைத்து  நாடுகளிலும் ஓராண்டு காலம் ஊரடங்கு காரனத்தினால் வண்டிகள் ஏதும் பெருமளவு ஓட்டப்பட வில்லை.இந்நிலையில் பல நாடுகளில்  பெட்ரோல் டீசலின் விலை அதிக அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.ஆனால் நம் இந்தியாவில் மட்டும் அதிக அளவு டாக்ஸ் ஏற்றியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. அதுமட்டுமின்றி போட்ட சாலை ரோடுகளின் நிலையே போட்ட ஓராண்டுக்குள் குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது.இதனால் மீண்டும் ரோட்டை புதுபிப்பதர்காக சராசரி 1.3லட்சக் கோடி பணங்கள் அதற்கென்று தனியாக தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.இதுவாவது தரத்தில் உள்ளதா என்று பார்ப்போம்.

அதன்பின் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் படி லாரி உரிமையாளர் சங்கமும் போராட்டம் செய்தனர்.ஆனால் மத்திய அரசு எதையும் கண்டுக்கொள்ளவில்லை.இன்றைய பெட்ரோலின் விலை எந்த மாற்றத்தையும் காணமால் ரூ.93.11 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.டீசல்  ரூ.86.45 விற்பனை செய்யப்படுகிறது.இன்னும் பெட்ரோல் விலையானது ரூ.100 ரூபாயயை தொடும் என பேசிவருகின்றனர்.