உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி! மெதுவாக பந்துவீசியதால் இரண்டு அணிகளுக்கும் அபராதம்!!

0
100
#image_title

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி! மெதுவாக பந்துவீசியதால் இரண்டு அணிகளுக்கும் அபராதம்!

 

நடந்து முடிந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி போட்டி கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கியது. இந்த டொஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று அதாவது ஜூன் 11ம் தேதி முடிந்தது.

 

இரண்டாவது உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் லண்டல் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

 

இதையடுத்து 173 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 270 ரன்கள் அதிகமாக அடித்து 444 ரன்களை இலக்காக வைத்தது.

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் எட்டாத இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. வெற்றி பெறுவதற்கு இன்னும்  280 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர்.

 

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய அணி 234 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து வகையான சேம்பியன்ஷிப் தொடர்களின் கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

 

2021ம் ஆண்டு நடந்த முதல் ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு இந்த ஆண்டும் தோல்வியே கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி நான்கு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இருந்தாலும் இங்கிலாந்து சூழலில் தாங்களே மிகச் சிறந்த அணி என்று ஆஸ்திரேலிய அணி நிரூபித்துள்ளது.

 

டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு 13 கோடியே 25 லட்சமும் தோல்வியடைந்த இந்திய அணிக்கு 6 கோடியே 50 லட்சமும் பரிசு தொகையாக கிடைத்தது. இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரண்டு அணிகளுக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

 

உலக டெஸ்ட் சேம்பியன் ஷிப் டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசிய குற்றத்துக்காக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணததில் 100 சதவீதம் அபராதமும் ஆஸ்திரேலிய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதம் விதித்துள்ளது. இரண்டு அணிகளும் மெதுவாக பந்து வீசிய காரணத்துக்காக ஐசிசியின் போட்டி நடுவர் ரஞ்சன் மடுகலே இந்த அபராதத்தை விதித்துள்ளார்.

 

இது போலவே 2021ல் நடந்த முதல ஐசிசி டெஸ்ட் சேம்பியர்ஷிப் போட்டியில் மெதுவாக பந்து வீசிய காரணத்துக்காக இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணி விளையாடிய கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில் மூன்று டேஸ்ட் போட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.