அட..இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! இனிமேல் உஷாராக சாப்பிட வேண்டும்!!

0
63

அட..இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! இனிமேல் உஷாராக சாப்பிட வேண்டும்!!


உடல் நலனில் அக்கறை செலுத்துபவர்கள் சர்க்கரையை சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். வெள்ளையாக இருப்பது மட்டுமே சர்க்கரை ஆகி விடாது நமக்கு தெரியாமல் பல பெயரில் பலவிதமாக சர்க்கரை இருக்கிறது.

வேறு என்னென்ன பெயர்களில் சர்க்கரை உணவில் சேர்க்கப்படுகிறது என்பதை இங்கு அறிந்து கொள்வோம். உணவுப் பொருள் தயாரிப்பவர்கள் இனிப்பை சிரப் வடிவத்தில் சேர்க்கிறார்கள். சிரப் என்பது மற்றவற்றை விட சிறிது அடர்த்தியாக இருப்பதால் அதில் அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது.

சர்க்கரை என்பது இனிப்புகளில் மட்டும்தான் சேர்க்கப்படுகிறது என்பது உண்மை அல்ல நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இனிப்புகளில் மட்டுமல்லாமல் பேக் செய்யப்பட்ட உணவுகளிலும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. சர்க்கரையால் உடம்பிற்கு சக்தி என்று எதுவும் கிடையாது ஆனால் சக்தி வாய்ந்த உணவுகள் என்று கூறி அடைமொழியுடன் விற்பனை செய்கிறார்கள்.

சுகர் ஃப்ரீ கேக்ஸ் சுகர் ஃப்ரீ ஸ்வீட்ஸ் என்று நிறைய கூறுவார்கள். அதனால் இதில் சர்க்கரையே இல்லை என்று கூறி விட முடியாது ஏனென்றால் அதில் உள்ள மொலாசசை நீக்கிவிட்டு சேர்ப்பார்கள். பொதுவாக உணவுகளில் சர்க்கரை இருக்கும் ஆனால் சுவைக்காக இன்னும் அதிகமாக சேர்ப்பார்கள்.

உதாரணத்திற்கு நாம் அனைவரும் பாலில் இனிப்பு சேர்க்காமல் குடிப்பதில்லை. ஆனால் ஒரு கப் பாலில் 13 கிராம் சர்க்கரை மற்றும் 8 கிராம் கால்சியம் புரோட்டின் உள்ளது. சில ஜூஸ் மற்றும் சோடாக்களில் முழுவதுமாக சர்க்கரை மட்டுமே இருக்கும். சுகர் ஃப்ரீ என்று சொல்லக்கூடிய அனைத்து பொருட்களையும் நம்பிவிடக் கூடாது.

ஏனென்றால் ஒரு பேக் செய்யப்பட்ட உணவு பொருள் மூன்று மாத அளவிற்கு கெடாமல் இருக்கும் அப்படி என்றால் கண்டிப்பாக அதில் சர்க்கரை சேர்த்து இருப்பது தான் காரணம். உடலில் சர்க்கரை அதிகமாக சேராமல் இருப்பதற்கு சில டிப்ஸ் இங்கு தெரிந்து கொள்ளலாம். உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படுகிற சர்க்கரையை சேர்க்காமல் சாப்பிட்டு வாருங்கள்.

வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட வேண்டும் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

author avatar
CineDesk