PRESS என்ற வார்த்தையை YouTube சேனல்கள் பயன்படுத்த தடை! மத்திய அரசு எச்சரிக்கை

0
87

PRESS என்ற வார்த்தையை YouTube சேனல்கள் பயன்படுத்த தடை! மத்திய அரசு எச்சரிக்கை

யூடியூப் சேனல்கள் இனி PRESS என்ற வார்த்தையை பயன் படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இணைய உலகம் அசுர வளர்ச்சி அடைந்த பிறகு யூடியூப் சேனல்கள் ஆதிக்கம் மாபெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து வந்த பல்வேறு பல நிகழ்ச்சிகள், தற்பொழுது நொடியில் நமது செல்போன்களில் காட்டிவிடுகிறது. மேலும் தற்போது யூடியூப் பக்கம் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக நிறைய செய்தி சேனல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இவற்றை தனி நபர் அல்லது குழுவாக இணைந்து செய்திகளை தங்கள் யூடியூப் பக்கங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் தங்களை PRESS என்ற வார்த்தையை பயன்படுத்தி தவறான விஷயங்களில் ஈடுபடுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துகொண்டிருந்தன.

இந்த சூழ்நிலையில் மத்திய அரசு அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி யூடியூப் சேனல்களில் பணிபுரிவோர்கள் நடத்துவோர்கள் தங்களைப் PRESS என்று பயன்படுத்தினால் அவர்கள் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இணை அமைச்சர் கர்னல் ராஜவர்த்தன்சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் மக்கள் தொடர்பு அமைச்சகத்தில் பதிவு செய்து ஆர்.என்.ஐ-யில் பதிவு செய்துள்ள பிரிண்ட் மற்றும் எலக்ட்ரானிக் மீடியாக்கள், ரேடியோ நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் மட்டுமே செய்தியாளர்களாக அங்கீகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அடையாள அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப் சேனல்களில் பணிபுரிபவர்கள் செய்தியாளராக அங்கீகரிக்கப்படுவதில்லை என்றும், அவர்கள் PRESS என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு PRESS என்ற வார்த்தையை பயன்படுத்தினால் அது சட்டப்படி குற்றம் எனவும், போலியாக செயல்படுவோர்கள் மீது காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யூடியூப் சேனல்கள் நடத்துவோர்கள் கதிகலங்கி போயுள்ளனர்.

author avatar
Parthipan K