அடுத்த ஆறு மாதங்களில் மொபைல் போன்களின் சேவை கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு

0
76

மொபைல் போன்களின் சேவை கட்டணங்கள் அடுத்த 6 மாதங்களில் உயர வாய்ப்பு இருப்பதாக ஏர்டெல் நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசியபோது இதனை தெரிவித்தார். இந்தியாவில் இணைய சேவையில் 16 ஜிபி டேட்டாவிற்கு ரூபாய் 160 ரூபாய் மட்டுமே வசூலிக்க படுவதாக கூறினார்.இது இணையத்துறையின் மோசமான நிலையை காட்டுவதாக அவர் கூறினார்.

இணையவழி சேவை தற்பொழுது அவசியமானது ஒன்று என்றும் இதில் மாதத்திற்கு ரூபாய் 200 செலுத்தும் நிலை உருவாகும் என்று கூறினார் .ஆனால் சராசரியாக 300 ரூபாய் வரை வசூலிக்க பட்டால் மட்டுமே தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பொருளாதாரம் மேம்படும் என ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பாரத் தெரிவித்தார்.

 

author avatar
Parthipan K