தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!

0
65

தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!

 

தக்காளி விலை உயர்வதை கண்டித்து வடமாநிலத்தில் வித்தியாசமாக போராட்டம் நடத்தியவர்களின் வித்தியாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

நாடு முழுவதும் தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தக்காளி விலை சதத்தை தொடுகின்றது.  தற்பொழுது தக்காளியின் விலை தமிழகத்தில் கிலோவுக்கு 160 ரூபாயாக உள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தியும் அரசை கண்டித்தும் வருகின்றனர்.

 

மாநில அரசுகளும் தக்காளியின் விலையை குறைப்பதற்கு முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை கண்டித்து பஞ்சாப் மாநிலத்தில் வித்தியாசமான போராட்டம் நடந்துள்ளது.

 

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் தக்காளி விலை உயர்வை கண்டித்தும் அத்தியாவசிய பொருள்களின் விலையை கண்டித்தும், பெட்ரோல் விலையை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் இந்த வித்தியாசமான போராட்டத்தை நடத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் ஒரு கார் முழுவதும் தக்காளியை ஒட்டி வைத்து தக்காளி மாலைகளை கழுத்தில் அணிந்து கொண்டு மேல தாளங்களுடன் போராட்டத்தை நடத்தியுள்ளனர். அருகில் பெட்ரோலை வைத்தும் போராட்டம் செய்தனர்.

 

இது தொடர்பான வீடியோ இணையதளத்தில், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த மாற்று வழிமுறையாக ரேஷன் கடைகள் மூலமா தக்காளியை கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.