தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா… அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து – திரும்புகிறதா 2011 உலகக் கோப்பை வரலாறு?

0
93

தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா… அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து – திரும்புகிறதா 2011 உலகக் கோப்பை வரலாறு?

இந்தியா நேற்று நடந்த தென் ஆப்பிரிக்க அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 134 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் டேவிட் மில்லர் மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோரின் பொறுப்பான ஆட்ட்த்தால் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் தென் ஆப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா தோற்றாலும், ஒரு விதத்தில் இந்தியாவுக்கு நல்லதுதான் என்று ரசிகர்கள் ஒருசிலர் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அதற்கு முக்கியக் காரணம் இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற போது லீக் போட்டியில் இதுபோல தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்தது. அதன் பின்னர்தான் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி சென்று உலகக்கோப்பையை வென்றது. அதனால் அந்த அதிர்ஷ்டப்படி இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்பதே அவர்களின் கணிப்பாக உள்ளது.

அதே போல 2011 ஆம் ஆண்டை போலவே இந்த முறையும் இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியை வெற்றி பெற்றுள்ளது.