யூரிக் ஆசிட் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!! இதோ இதை மட்டும் செய்தால் போதும்!!

0
242
#image_title
யூரிக் ஆசிட் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!! இதோ இதை மட்டும் செய்தால் போதும்!!
நம் உடலில் யூரிக் ஆசிட் அதிகமாக சுரப்பதால் கால் வலி, முழங்கால் வலி, குதிகால் வலி போன்று பல வலிகள் ஏற்படும். இந்த யூரிக் ஆசிட் பிரச்சனையால் கணு எங்கு எல்லாம் இருக்கிறதோ அங்கு எல்லாம் வீக்கம் ஏற்படும். கால், கை, முழங்கால் ஆகிய பகுதிகளில் வலி ஏற்படுவது மட்டுமில்லாமல் வீக்கம் ஏற்படும். இதனால் நடக்க முடியாது. இந்த பிரச்சனையை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
இந்த பிரச்சனையை சரிசெய்ய சில வழிமுறைகள்…
* யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் பெரும்பாலும் நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் அதிகமாக சாப்பிட வேண்டும். பழச்சாறுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பாரம்பரிய அரிசி வகைகள் குதிரை வாலி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி அரிசி போன்ற உணவுகளை எடுத்து அதிக அளவு தண்ணீர் குடித்தாலே யூரிக் ஆசிட் பிரச்சனை சரியாகிவிடும்.
* நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வீரகந்தி மாத்திரையை வாங்கி எடுத்துக் கொள்ளவும். இந்த மருந்தை டானிக் போலவோ அல்லது மாத்திரையாகவோ சாப்பிடலாம்.
* யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் காலையில் பீர்க்கங்காய் சாறு 100 மிலி, கொத்தவரங்காய் சாறு 50 மிலி குடிக்க வேண்டும். கத்திரிக்காய் ஜூஸ் 11 மணிக்கு எடுக்க வேண்டும். மாலை நேரத்தில் கொத்தவரங்காய் ஜூஸ் 50 மிலி குடிக்க வேண்டும். இவ்வாறு குடிக்கும் பொழுது யூரிக் ஆசிட் பிரச்சனை சரியாக தொடங்கும்.
* மாமிச உணவுகள் அதிகம் சாப்பிடக் கூடாது. எண்ணெயில் பொறித்த உணவுகள் சாப்பிடக் கூடாது.
* புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகள் எடுக்க கூடாது.
* பைபர் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
* யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் கொத்தமல்லி 100 கிராம், உலர் திராட்சை 100 கிராம் எடுத்து இரண்டையும் இடித்து 4 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 4 லிட்டர் தண்ணீர் 2 லிட்டராக வரும் வரை கொதிக்க வைத்து பிறகு ஆறிய பிறகு வடிகட்டி எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளவும். இதை காலையில் 50 மிலி, மாலையில் 50 மிலி குடித்து வந்தால் யூரிக் ஆசிட் பிரச்சனை குணமடையும். உடலில் கழிவுகள் இருக்காது. இரத்தம் சுத்தமாகும்.