பள்ளி திறந்த உடனேயே வேலையை காட்டிய கொரோனா! மேலும் இரண்டு மாணவிகளுக்கும் பாதிப்பு!

0
65
Corona showed work as soon as school opened! Vulnerability for two more students!
Corona showed work as soon as school opened! Vulnerability for two more students!

பள்ளி திறந்த உடனேயே வேலையை காட்டிய கொரோனா! மேலும் இரண்டு மாணவிகளுக்கும் பாதிப்பு!

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் கொரோனா நோய் தொற்றின், இரண்டாவது அலையின் காரணமாக அனைத்து நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மூடப்பட்டிருந்தன. கடந்த ஒன்றரை வருட காலமாகவே அனைத்தும் மூடிய நிலையில் தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது மிகவும் குறைந்து விட்டது. அதன் காரணமாக தற்போது பள்ளி கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த 1ஆம் தேதி தான் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியில் உள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவிக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவியை தனிமைப்படுத்திவிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இருவேறு வகுப்புகளை சேர்ந்த மாணவிகளுக்கும் கோரோனோ பாசிட்டிவ் வந்திருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவ்விருவரையும் தனிமை படுத்திவிட்டு, மற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு என்றும் ஒரு மாணவி பன்னிரண்டாம் வகுப்பு என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நடத்தப்படவுள்ள பரிசோதனையின் முடிவுகள் வந்தால்தான், கொரோனா  எண்ணிக்கையின் மதிப்பு உயருமா? அல்லது குறையுமா? என்பது தெரியவரும். எனவே அனைவருமே ஒருவித அச்சத்தில் உள்ளனர். தற்போது அரசு வகுத்துள்ள திட்டங்களை செயல் படுத்தித்தான் பள்ளிகள் அனைத்தும் தற்போது நடைபெறுகின்றன. ஒரு வகுப்புக்கு 20 மாணவ, மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் சுழற்சி முறையில் அனைவருக்கும் வகுப்புகள் எடுக்கப்படும் என்றும், விருப்பமுள்ளவர்கள் வரலாம். விருப்பமில்லாதவர்கள் வர வேண்டிய அவசியம் இல்லை வீட்டில் இருந்தே கற்கலாம் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாரத்தின் ஆறு நாட்களும் வகுப்புகள் நடைபெறும் எனவும், அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஆரம்பித்த மூன்று நாட்களிலேயே இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளதால், அனைவருமே மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.